தடுமாறும் தனித்துவ தலைமைகள்!

-நஜீப்-

நாட்டில் இருக்கின்ற சிறுபான்மை அரசியல் கட்சிகள் அனைத்தும் போல தன்னலத்துக்காக வரும் பொதுத் தேர்தலில் சஜித்துக்கு பின்னால் நிற்பதற்கு அதிக வாய்ப்புக்கள் இருந்தாலும்,  தேர்தல்களைப் பொறுத்து முடிவுகள் வித்தியாசமாக இருக்கும்.

இதற்கு நல்ல உதாரணம், கடந்த 2019 ஜனாதிபத் தேர்தலில் 5564239 வாக்குகளைப் பெற்ற சஜித், 2020 பொதுத் தேர்தலில் கூட்டணி போட்டு 2771980 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இது ஐம்பது சதவீதி சரிவாகும். சிறுபான்மைக் கட்சிகள் தமது உறுப்புரிமையை வென்றடுக்கத்தான் சஜித் அணியுடன் கூட்டுக்கு வருகின்றாகள்.

Gold and Mobile Phone Smuggling Case: Parliamentarian Ali Sabry Raheem Expelled from ACMC Party - ரெலோ - தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

தேர்தலின் பின்னர் அவர்கள் என்றுமே பல்டிதான். இந்தத் தேர்தலிலும் அப்படித்தான் நடக்கும். தேர்தல் கூட்டணிகள் பற்றி நாம் சில சிறுபான்மைத் தலைமைகளுடன் தொடர்பு கொண்டு பேசிப் பார்த்தால் நாம் இந்த விடயத்தில் இன்னும் எந்த இறுதி முடிவுகளையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றார்கள்.

Dr. Shafi,reinstated and assigned to Kurunegal General Hospital once more I Sri Lanka Latest News - Sri Lanka News Update

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது அதற்கு அச்சானியா இருந்தவர்கள் இருக்கின்ற கூட்டணியில் போய் நீங்கள் எப்படி அரசியல் செய்ய முடியும் என்று கேட்டால்,  இந்த விடயத்தில் தான் நாம் கடுமையாக யோசிக்க வேண்டி இருக்கின்றது என அகில இலங்கை மக்ககள் காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.

நன்றி: 03.03.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

வருகின்றது பொதுத் தேர்தல்!

Next Story

அம்மா அடி: விட்டுச் சென்ற அக்கா-தம்பி 13 ஆண்டுகளுக்குப் பின் வீடு திரும்பியது எப்படி?