தடுப்பூசி போடலைனா 100 % ஆபத்துதான்…! ஓமிக்ரானை கண்ட மருத்துவர் எச்சரிக்கை!!

-ராஜ்குமார்-

தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களை ஓமிக்ரான் வைரஸ் தாக்கினாலும் அதிக பாதிப்பு இருக்காது எனவும், ஆனால் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு 100% ஆபத்து ஏற்படும் என தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் மாறுபாட்டை முதலில் கண்டறிந்த மருத்துவரான டாக்டர் ஏஞ்சலிக் கோட்ஸி எச்சரித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நாள் ஒன்றுக்கு 200 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு, கட்டுக்கோப்பில் வைக்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களுக்குள் திடீரென கொரோனா தொற்று நாள்தோறும், 1,200 அளவில் அதிகரித்து, நேற்று 2,465 ஆக அதிகரித்துவிட்டது.

முதலில் பிரிட்டோரியாவிலும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள், ஸ்வானே மெட்ரோ நகரம் ஆகியபகுதிகளில் கரோனா தொற்று அதிகமாக இருந்தது. அதன்பின் அப்பகுதியில் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பயிலும் இளைஞர்கள் மத்தியில் இந்த வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது.

மருத்துவர் ஏஞ்சலிக் கோட்ஸி

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் அதிகமான வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாகவும், உருமாற்றங்கள் அதிகம் கொண்டதாகவும் இருக்கும் என தென் ஆப்பிரிக்காவின் மூத்த மருத்துவரான ஏஞ்சலிக் கோட்ஸி கண்டறிந்தார். முதலில் இந்த புதிய வைரஸுக்கு பி.1.1.529 என்றும், பின்னர் பொதுப்பெயராக ஓமிக்ரான் எனவும் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். தற்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் 400க்கும் மேற்பட்டோர் வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஓமிக்ரான் சிகிச்சை

ஓமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரில் ஏராளமானோர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், சிலரோ பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். இந்த தொற்றுக்கு உள்ளவர்களில் பாதி பேருக்கு தான் தொண்டை வலி, காய்ச்சல், உடம்பு வலி போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது, கிட்டத்தட்ட 90% பேருக்கு அறிகுறிகள் ஏற்படுவதில்லை என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு வழக்கமாக கொடுக்கும் சத்து மாத்திரைகள், பாராசிட்டமால் போன்ற சாதாரண மாத்திரைகளை தான் கொடுக்கப்படுவதாக மருத்துவநிபுணர்கள் கூறியுள்ளனர்.

100 % ஆபத்து

இந்நிலையில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களை ஓமிக்ரான் வைரஸ் தாக்கினாலும் அதிக பாதிப்பு இருக்காது எனவும், ஆனால் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு 100% ஆபத்து ஏற்படும் என தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் மாறுபாட்டை முதலில் கண்டறிந்த மருத்துவரான டாக்டர் எஞ்சலிக் கோட்சி எச்சரித்துள்ளார். தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் அவர் பிரபல செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், தற்போது போடப்படும் தடுப்பூசிகள் நிச்சயம் ஒமிக்ரான் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றும், ஆனால் தடுப்பூசி போடாத அவர்களுக்கு 100% இந்நோயின் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கூறியுள்ளார்.

தடுப்பூசியை மட்டும் நம்பக் கூடாது

மேலும் தடுப்பூசியை மட்டுமே முழுவதுமாக நம்பி இருந்துவிடக்கூடாது. மனிதர்கள் கடைபிடிக்கும் பழக்கவழக்கங்களும் நோய் பாதிப்புடன் தொடர்புடையது. அதனால் முககவசம் அணிதல், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தால் ஆகியவற்றை தவறாமல் செய்து வர வேண்டும் என்று மருத்துவர் ஏஞ்சலிக் கோட்ஸி கூறியுள்ளார்.

Previous Story

தாய்நாட்டை சீரழிக்க அனுமதிக்க முடியாது

Next Story

தனக்கு ஒருபோதும் தடை இருந்ததில்லை – ஜாகிர் நாயக்