தடுப்பூசிகள் ஒமிக்ரானை  எதிர்க்கும்?

 

ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே கொரோனா தொற்று வீரியமடையாமல், இப்போதுள்ள தடுப்பூசிகள் பாதுகாக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய ஒமிக்ரான் திரிபின் முதல் கட்ட ஆய்வகப் பரிசோதனையில், பைசர் தடுப்பூசி அதன் தாக்கத்தை ஓரளவுக்குத் தடுப்பதாகத் தெரிகிறது. புதிய ஒமிக்ரான் திரிபு தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்பான்களை, குறிப்பிடத்தக்க அளவில் கடப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் டாக்டர் மைக் ரயான் மற்ற திரிபுகளைவிட ஒமிக்ரான் திரிபு சிறப்பாக தடுப்பூசி தூண்டிய நோயெதிர்ப்பு அமைப்பை கடப்பதாக எந்த அறிகுறியும் இல்லையென்று கூறியுள்ளார்.

“கடும் நோய்த் தாக்குதல் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதலைக் குறைப்பது ஆகியவற்றை இதுவரையிலான கொரோனா திரிபுகளுக்கு எதிராகத் தடுப்பூசிகள் திறம்படச் செயல்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும், அப்படி இருக்காது என்று எதிர்பார்க்க எந்தக் காரணமும் இல்லை,” என உலக சுகாதார நிறுவனத்தின் அவசரக்கால இயக்குநர் டாக்டர் ரயான் ஏ.எஃப்.பி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், டெல்டா மற்றும் இதர திரிபுகளைவிட, ஒமிக்ரான் திரிபு மக்களுக்கு தீவிர உடல்நலக்குறைவை ஏற்படுத்தவில்லை என்று ஆரம்பக்கட்ட தரவுகள் பரிந்துரைப்பதாகக் கூறினார். இன்னமும் மதிப்பாய்வு செய்யப்படாத புதிய தென்னாப்பிரிக்க ஆய்வு ஒன்று, ஃபைசர்/பயோ என் டெக் தடுப்பூசியானது கோவிட் தொற்றின் அசல் திரிபைவிட ஒமிக்ரானுக்கு எதிராக 40 மடங்கு குறைவான செயல்திறனைக் கொண்டிருக்கலாம் என்று கூறுகிறது.

ஆனால் தடுப்பூசியின் நோய் எதிர்ப்புத் திறனிலிருந்து தப்பிக்கக்கூடிய ஒமிக்ரானின் திறன், ‘முழுமை பெறவில்லை’ என ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய ஆப்பிரிக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் வைராலஜிஸ்ட் பேராசிரியர் அலெக்ஸ் சிகல் கூறினார்.

12 பேரிடம் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனை முடிவுகளைப் பார்க்கும்போது, ஒமிக்ரானில் தான் எதிர்பார்த்ததைவிடச் நல்ல முடிவுகள் கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். நோய்த் தொற்றுக்குப் பிறகு தடுப்பூசி செலுத்திக்கொள்வது அல்லது பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வது, நோய்த் தொற்றை குணப்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கும், அதே போல தீவிர நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வாய்ப்பும் அதிகம்.

Previous Story

இந்தியருக்கு ஹிந்தி தெரிந்திருக்கும்!

Next Story

சிகரெட்: நியூசிலாந்தில் நுாதன சட்டம்