தங்கம்: புத்தாண்டில் விலை அதிகரிக்கும்

2021: நடப்பு ஆண்டின் பிற்பகுதியில், தங்கத்தின் விலை சற்று குறைந்துவிட்ட போதிலும், அடுத்த ஆண்டில்(2022)மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

புத்தாண்டில், 10 கிராம் தங்கத்தின் விலை 55 ஆயிரம் ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தொற்று நோய் பரவல் அதிகரிப்பு, பணவீக்க பிரச்னைகள், அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்து வருவது ஆகியவற்றுக்கு இடையேயும், புத்தாண்டில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2020ல், எம்.சி.எக்ஸ்., சந்தையில், 10 கிராம் தங்கத்தின் விலை 56 ஆயிரத்து, 200 ரூபாயாக இருந்தது. இது தற்போது 48 ஆயிரம் ரூபாயாக சரிந்துள்ளது. இது அதிகபட்ச விலை உயர்வில் இருந்து 14 சதவீத சரிவாகும். நடப்பு ஆண்டு ஜனவரி மாத விலையுடன் ஒப்பிடும் போது, தற்போதைய விலை 4 சதவீத குறைவாகும்.

இருப்பினும், பன்னாட்டு சந்தைகளுடன் ஒப்பிடும்போது, ரூபாய் மதிப்பு குறைவு காரணமாக, 3 சதவீதம் அளவுக்கு விலை அதிகமாகவே உள்ளது. இது குறித்து, ‘காம்டிரெண்ட்ஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஞானசேகர் தியாகராஜன் கூறியதாவது:

உள்நாட்டை பொறுத்த வரையில், புத்தாண்டு துவக்கத்தில் தங்கத்தின் விலை 45 – 50 ஆயிரம் ரூபாயாக இருக்கும். (SRI LANKA: 134000 RS) இரண்டாவது பாதியில், 55 (SRI LANKA: 147400 RS) ஆயிரம் ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Previous Story

கொரோனா சுனாமி: WHO எச்சரிக்கை

Next Story

முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி  மருத்துவமனையில் அனுமதி!