டொலர்தான் ‘கடவுளடா’

-நஜீப்-

பக்கத்து வீட்டான் பசி இருக்க அவனுக்கு சோறு கொடுப்பது வழக்கமான விவகாரம்தான். என்னதான் சீண்டல்கள் நடந்தாலும் இந்தியா அதன் தார்மீகப் பணியை இந்த நேரத்தில் செய்திருக்கின்றது. அதனை நாம் மனிதம் என்று எடுத்துக் கொள்ள முடியும்.

ஆனால் தொடர்ந்தும் இது நடக்க வாய்ப்பில்லை. இது தொடர்பாக ஜேவிபி தலைவர் அணுரகுமார திசாநாயக்க தற்போது சொல்லி வருகின்ற ஒரு கணக்கை இங்கு பார்ப்போம். நமக்கு இன்று ஒரு நாளைக்கு 1400 கோடி ரூபாய் தேவைப்படுகின்றது.

ஆனால் நமது வரவு 400 கோடி என்று இருக்கும் போது என்ன செய்ய முடியும் என்பது அணுர கேள்வி. அதனை நாம் மேலும் ஒரு படி மேலே சென்று மக்களுக்கு இப்படிப் புரிய வைக்கலாம் என்று நினைக்கின்றோம்.

ஒரு குடும்பத் தலைவன் வருமானம் ஒரு நாளைக்கு 400 ரூபாவுக்கு மேல் தேராமல் இருக்கின்றது. அவனது ஒரு நாள் சராசரி செலவு 1400 ரூபா என்றால் நிலமையைப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும். இதுதான் தேசத்துக் கதை.! இன்று டொலர்த்தான் நம்ம நாட்டுக் கடவுள்.

-நன்றி: ஞாயிறு தினக்குரல் 30.01.2022

Previous Story

ISIS பெண்கள் தளபதி அமெரிக்காவில் கைது!

Next Story

கனடா பிரதமர் ரகசிய இடத்தில்