டெல்டாவை வென்ற ஒமிக்ரான் !

Labore nonumes te vel, vis id errem tantas tempor. Solet quidam salutatus at quo. Tantas comprehensam te sea, usu sanctus similique ei. Viderer admodum mea et, probo tantas alienum ne vim.

 

 

மற்ற கொரோனா வைரஸ்களான டெல்டா, பீட்டாவை விட அதிவேகமாக ஒமிக்ரான் பரவுகிறது என்றும், ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் தாக்கும் திறன் இதனிடம் உள்ளதாகவும் சிங்கப்பூர் சுகாதாரத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.டெல்டா கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு, இப்போதுதான் பல நாடுகள் மீண்டு வந்து கொண்டிருக்கின்றன.. இதையொட்டி ஆங்காங்கே சில நாடுகளில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  இந்த நேரத்தில் திடீரென ஓமிக்ரான் என்ற வைரஸ் உலகம் முழுவதும் 36 நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில்தான் இது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது..

ஆபத்து

இந்த வைரஸ் ஆபத்தானது என்றும், இது வேகமாக பரவக்கூடியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஓமிக்ரான் வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு வேகமாக பரவும் தன்மை உடையது என்றும் தடுப்பூசிகள் இந்த வைரஸுக்கு எதிராக குறைந்த அளவே செயலாற்றுவதாகவும் சொல்லலப்பட்டு வருகிறது.. ஆனால், ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பின் சில அறிகுறிகளில் சோர்வு, லேசான தசை வலி, தொண்டை அரிப்பு, வறட்டு இருமல், லேசான காய்ச்சல் ஏற்படும் என்றும் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்..

முயற்சி

ஒமிக்ரானில் 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் காணப்படுவதால், உலக சுகாதார அமைப்பு, ஒமிக்ரானை கவலையளிக்க கூடிய வைரஸாக வகைப்படுத்தியுள்ளது… அதாவது பெரும் முயற்சி எடுத்து, இந்த வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் அலர்ட் ஆகி வருகின்றன.. அந்த வகையில் சிங்கப்பூர் அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பரவல்

அந்த அறிக்கையில் உள்ளதாவது: “மற்ற கொரோனா வைரஸ்களான டெல்டா, பீட்டாவை விட அதிவேகமாக ஒமிக்ரான் பரவுகிறது… அதேபோல ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் தாக்கும் திறன் இதனிடம் உள்ளது.. ஏற்கெனவே பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தி உருவாகும்… அதையும் தாண்டி ஒமிக்ரானால் அவர்கள் பாதிக்கப்படலாம்.. அந்த அளவிற்கு இது ஆற்றல் கொண்டதாக இருக்கிறது..

 

நிபுணர்கள்

இந்த தகவல்கள் அனைத்தும், உலகம் முழுவதும் பெறப்பட்ட முதற்கட்ட தகவலின்படி தெரியவந்தவை என்றாலும், முழுமையான ஆய்வு தான் ஒமிக்ரானின் தன்மை, தீவிரத்தை கண்டறிய உதவும்… இன்னும்கூட, இந்த ஒமிக்ரான் பற்றி நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன… ஆனால் அவற்றுக்கு இப்போதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை… அதேபோல, இந்த வைரஸுக்கு தடுப்பூசிகள் எந்த அளவுக்கு தடுக்கும் என்ற ஆய்வும் நடந்து கொண்டிருக்கிறது.. எனினும் மக்கள் விரைந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Previous Story

அரபிக் கடலின் சிங்கம்

Next Story

ஒமைக்ரான் தீவிரம் குறைவாம்! யாரை நம்புவது?