டேன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் பலி

வெல்லம்பிட்டியில் ஆறாம் மாடியில் மது

அருந்திக் கொண்டிருந்த போது துப்பாக்கி சூடு!

சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத் மீது சற்று முன்னர் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

மீதொட்டுமுல்ல பிரதேசத்தின் லக்சந்த செவன எனப்படும் அடுக்குமாடிக் கட்டடத் தொகுதியில் பிரியசாத்துக்கு சொந்தமான வீட்டில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த டேன் பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

டேன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் பலி | Dan Priyasad Shot By Gunmen

சம்பவத்தில் பிரியசாத் படுகாயமடைந்துள்ளதாக முன்னதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவித்திருந்தன.

எனினும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த பிரியசாத் உயிரிழந்து விடடதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

டேன் பிரியசாத் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளராக செயற்பட்டவர் என்பதுடன் நவ சிங்களே என்ற சிங்கள பௌத்த இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

2025 வருடத்துக்கான மிகப் பெரும் நகைச்சுவை!

Next Story

நம்ம பொலிஸ் புதிய கதை! டேன் பிரியசாத் மரணிக்கவில்லையாம்!