டுபாய் காட்டில் நல்ல மழை

-யூசுப் என் யூனுஸ்-

The Top Things to Do in Moscow

உக்ரைன்-ரஸ்யப் போரானது போர்த் தந்திரங்களிலும் தளபாடங்களிலும் பல புதிய மாறுதல்களை நமக்குக் காட்சிப்படுத்தி வருகின்றது. அத்தோடு இந்தப் போரால் நல்ல வருமானத்தைப் பெற்றுவரும் நாடுகளும் இருக்கின்றன. போரால் ஐரோப்பா அமெரிக்க வர்த்தகத் தடை தனக்குத் தானே தீ மூட்டிய கதைபோல இன்று அமைந்து விட்டது.

Visit Dubai in United Arab Emirates with Cunard

இதனால் பல ஐரோப்பிய நாடுகள் இந்தப் போரில் உக்ரைனுக்குக் கொடுக்கின்ற ஆதரவை விலக்கிக் கொள்ள முனைகின்றன. ஐரோப்பிய யூனியனிலும் நேட்டோவிலும் அங்கத்துவம் வகிக்கின்ற பிரான்ஸ் தற்போது ‘பிரிக்ஸ்’ கூட்டணியில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டிருக்கின்றது.

அதே போன்று தடை விதிக்கப்பட்டிருக்கின்ற ஈரானிடமிருந்து எரிபொருளை வாங்க ஜெர்மன் தீர்மானித்திருக்கின்றது. ஆளில்ல விமானங்களை ஏற்றுமதி செய்வதால் ஈரான் பெரும் வருமானத்தை சம்பாதித்து வருகின்றது.

Xmas and NYE: Dubai to Moscow from only $227!

இந்தியா ரஸ்யாவிடமிருந்து பெருந்தொகை எரிபொருளை வாங்கி விற்று பெரும் இலாபமீட்டி வருகின்றது. இவை அப்படி இருக்க இந்தப் போரால் மிகப் பெரிய வருமானம் ஈட்டி வரும் நாடு டுபாய். மேற்கத்திய நாடுகளில் வாங்கிய பொருட்களை இன்று ரஸ்யாவுக்கு டுபாயே வழங்கி வருகின்றது.

இதனால் பல பில்லியன் கணக்கில் டுபாய் பெரும் வருமானம் ஈட்டி வருகின்றது. உக்ரைன் போருக்கப் பின்னர் 17 மெற்றிக் தொன் தங்கத்தை டுபாய்க்கு ரஸ்யா வழங்கி இருக்கின்றது.

நன்றி: 18.06.2023 ஞாயிறு தினக்குரல்

 

 

Previous Story

வாழ்வா சாவா தீர்மானிக்கவும் ரணில் அதிரடி

Next Story

தந்தையர் தினம்