டிரம்ப் முதுகில் குத்தும் அசீம் முனீர்?

ஈரானுடன் நெருக்கமானதால் அமெரிக்க உளவுத்துறை வார்னிங்

அமெரிக்காவுடன், பாகிஸ்தான் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர், டிரம்புடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில் தான் அசீம் முனீர் அமெரிக்காவை ஏமாற்ற வாய்ப்புள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்த போர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு இருநாடுகள் இடையே முதற்கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடந்தது. பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் மத்தியஸ்தம் செய்தார்.

ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தற்போது மீண்டும் ஈரான் – அமெரிக்கா இடையே பிரச்சனை வெடித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை நேற்று முன்தினம் திறந்த ஈரான் மீண்டும் அதனை நேற்று மூடியது.

யூடர்ன் – பெரும் பதற்றம் மீண்டும் பதற்றம் ஈரானை சுற்றி அமெரிக்கா விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மற்றும் முப்படை வீரர்களை நிறுத்தி உள்ளது. இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அமெரிக்கா போர்க்கப்பல்கள், வீரர்களை வாபஸ் பெறவில்லை. இதனால் இருநாடுகள் இடையே மோதல் அதிகரித்துள்ளது.

மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அசீம் முனீர் மீது சந்தேகம் இதற்கிடையே தான் அமெரிக்கா – ஈரான் இடையே 2வது கட்ட பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் முயன்று வருகிறது. இதற்காக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் தலைமையிலான குழு ஈரான் சென்று அமெரிக்காவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளது.

இந்நிலையில் தான் தற்போது பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசீம் முனீர் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது அசீம் முனீர் இரட்டை நிலைப்பாட்டில் செயல்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

டென்ஷனில் அமெரிக்கா உளவுத்துறை வார்னிங் அமெரிக்கா மற்றும் ஈரான் என இருதரப்புடன் அவர் பேசி வருகிறார். இருந்தாலும் ஈரான் ராணுவ தலைமைகளுடன் அசீம் முனீர் அதிக நெருக்கம் காட்டி வருகிறார்.

இதுபற்றி அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுபற்றி அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள், டிரம்புக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.  அசீம் முனீரின் செயல்பாடு எதிர்காலத்தில் ஈரானுக்கு ஆதரவாகவும், அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராகவும் மாறலாம்.

ஏனென்றால் அவர் ஈரானுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறார். ஈரானுடன் நெருக்கமான அசீம் முனீர் குறிப்பாக ஈரானில் முக்கிய படைப்பிரிவாக செயல்பட்ட வரும் ஐஆர்ஜிசி எனும் ஈரான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையுடன் நீண்டகாலமாக தொடர்பில் உள்ளார்.

அவரது ஈரான் தொடர்புகள் அமெரிக்காவுக்கு பிரச்சனையாக மாறலாம் என்று கூறியுள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பரபரப்பு தகவல்: பாகிஸ்தான் மாஜி அதிகாரி பகீர் இதுபற்றி அந்த செய்தி நிறுவனத்திடம் பாகிஸ்தான் ஓய்வுபெற்ற ஜெனரல் அஹ்மத் சயீத், “ஆசிம் முனீர் பல மூத்த ஈரான் ராணுவ அதிகாரிகளுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பில் உள்ளார்.

குறிப்பாக, 2020ம் ஆண்டு அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழந்த முன்னாள் இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படை குட்ஸ் படையின் தளபதி காசிம் சுலைமானி மற்றும் 2025 ஜூன் மாதம் காலமான தளபதி ஹொசைன் சலாமி ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர் அசீம் முனீர் ” என்று கூறியுள்ளார்.

இதனால் அசீம் முனீர் மீது அமெரிக்க உளவுப்பிரிவினர் சந்தேகமடைந்து அவரது செயல்பாட்டை தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளன.

Previous Story

සහරාන්ව ආරක්ෂා කර, පාස්කු ප්‍රහාරය වෙනතුරැ, රටේ ආරක්ෂාව කඩ කළ පාපතරයෝ