டிரம்ப் பேச்சை கேட்டு.. ஈரான் மேட்டரில் நுழையும் பிரிட்டன்!

ஈரான் விஷயத்தில் உதவிக்கு வர வேண்டும் என்று, நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார் டிரம்ப். பல நாடுகள் இந்த கோரிக்கையை நிராகரித்த நிலையில், பிரிட்டன் தற்போது அமெரிக்காவுக்கு உதவ முன்வந்திருக்கிறது.

இது விஷயத்தை மேலும் தீவிரமாக்கும் என்று சொல்லப்படுகிறது. ஈரான் அடைத்து வைத்திருக்கும் ஹர்முஸ் நீரிணையை திறக்க உதவ வேண்டும் என்று டிரம்ப் கேட்டிருந்தார். இதற்கு தங்களுடைய உதவி கிடைக்கும் என்று பிரிட்டன் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

டிரம்பின் கோரிக்கை: ஈரானால் முடக்கப்பட்டுள்ள மிக முக்கியமான கடல் பாதையான, ஹர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான வழிமுறைகள் குறித்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹர்முஸ் நீரிணையில், ஈரான் கடல் கண்ணி வெடிகளை போட்டு வைத்திருக்கிறது. இதை ஒற்றை ஆளாய் அமெரிக்காவால் நீக்க முடியாது. எனவே, நட்பு நாடுகளிடம் ஹெல்ப் கேட்டிருந்தார். இதற்கு பிரிட்டன் உதவுவதாக சொல்லியிருக்கிறது.

உதவ முன் வந்த பிரிட்டன்: பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் இது குறித்து கூறுகையில், கடல் கண்ணிவெடிகளைக் கண்டறிந்து அழிக்கும் ரோபோக்களை அங்கு நிலைநிறுத்துவது குறித்து பிரிட்டன் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார்.

இந்தக் கடல் பகுதியை பாதுகாக்கும் பணியில் உதவுமாறு, 7 நாடுகளிடம் அதிபர் ட்ரம்பும் அவரது குழுவும் கோரிக்கை விடுத்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேநேரம் தங்களுக்கு உதவ மறுக்கும் நாடுகள் குறித்து நினைவில் வைத்துக்கொள்வோம் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க அமெரிக்காவின் நட்பு நாடுகள் உதவாவிட்டால், நேட்டோ அமைப்பிற்கு அது மிகவும் மோசமான எதிர்காலத்தை உருவாக்கும் என்று ‘பைனான்சியல் டைம்ஸ்’ இதழுக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

சீன அதிபருடன் சந்திப்பு: அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் இது குறித்து கூறுகையில், போருக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் இருக்க வேண்டியுள்ளதால், இந்த மாதம் சீனத் தலைவர் ஷி ஜின்பிங்குடன் நடக்கவிருந்த சந்திப்பு தள்ளிவைக்கப்படலாம் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இது தவிர: எண்ணெய் விநியோகத் தடையைச் சரிசெய்ய உதவுமாறு சீனாவையும் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். இதனால் இம்மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த பெய்ஜிங் பயணத்தை அவர் தள்ளிவைக்கக்கூடும்.

அதேபோல துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே, நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்தால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் ட்ரம்ப் நிர்வாகத்திடம், எரிசக்தி நெருக்கடி இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளது என்ற கவலையளிக்கும் செய்தியைத் தெரிவித்துள்ளனர். என்று எச்சரித்துள்ளனர்.

Previous Story

Gulf states push diplomacy as Iran vows war will end only on its terms

Next Story

Iran's "Dancing Missile"