டலஸ் அணியில் 45 பேராம்!

-நஜீப்-

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் கொந்தளிப்புக் காரணமாக கட்சிப் பிளவுகளும் மலர்வுகளும் ஏற்பட்டிருக்கின்றன. சஜித் அணியிலிருந்த ஹரினும், மனுஷவும் ரணிலின் ஆளும் தரப்பில் போய் ஒட்டிக் கொண்ட பின்னணியில், கட்சியில் தனக்குப் பெரும் தலையிடியாக இருந்த சம்பிக்கவும் தற்போது அந்த அணியிலிருந்து விலகி நாடாளுமன்றத்தில் தனிக் குடித்தனம் நடத்துகின்றார்.

இது ஒரு வகையில் சஜித்துக்கு நிம்மதி. ஆனால் அதில் ஆபத்துக்களும் இருக்கின்றன. சஜித்தை விட அரசியல் வியூகங்களை வகுப்பதில் சம்பிக்கு சற்று விவேகமானவர் என்பது நமது கருத்து. நாட்டில் அரசொன்றுக்குத் தலைமைத்துவம் கொடுக்கின்ற வாய்ப்பு  சஜித்துக்கு என்றாவது வருமா என்ற விடயத்தில் நமக்கு நிறையவே சந்தேகங்கள்.

இதற்கிடையில் மஞ்சல் நிறத்தை முன்னிருந்து டலஸ் அலகப்பெருமா தலைமையில் புதிய ஒரு கட்சி சமைப்பது பற்றி ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 45 வரையிலான மொட்டுத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள் பக்கம் இருப்பதாகவும் ஒரு தகவல். கட்சியின் பிரதான கோஷம் குடும்ப ஆட்சியை ஒழிப்போம் என்பதாம்.! அப்போ ராசாக்களுக்கு ஆப்புத்தான்.

நன்றி:19.06.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இலங்கைக்கு  அமெரிக்கா  கடன் 

Next Story

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி வேண்டும்: மாநாயக்க தேரர்கள்!