-நஜீப்-
நன்றி 24.08.2025 ஞாயிறு தினக்குரல்
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் பல வருடங்கள் இருக்கின்றன நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் பற்றிப் பரவலாகப் பேசபப்ட்டு வருகின்றது. மைத்திரியின் தம்பி டட்லி சிசேனாவை ஜனாதிபதி வேட்பாளராக்கின்ற ஒரு ஏற்பாடும் நடந்து வருகின்றது.
இவர் நாட்டில் இருக்கின்ற மிகப் பெரும் கோடிஸ்வரர் என்பதால் அவரிடம் காசு பரிக்கலாம் என்று பலதரப்பினர் இப்போது முண்டியடிக்கின்றனர். இதில் மைத்திரி ஆதரவாலர்கள், மொட்டு ஆதரவாலர்கள் பலரும் இருக்கின்றார்கள்.
அதே நேரம் யார் என்ன கூட்டணி போட்டாலும் தனது கட்சிதான் அதற்குத் தலைமைத்துவம் கொடுக்கும் என்று அடித்துச்சொல்லும் சஜித் அடுத்து வருகின்ற ஜனாதிபதித் தேர்தலிலும் நான்தான் எமது கட்சி வேட்பாளர் எனவும் ஒரு சந்திப்பில் பகிரங்கமாக அறிவித்தார் அவர்.
இதனால் புதிய கூட்டணி அமைத்து டட்லியை ஆதரிக்க எதிர்பார்த்திருந்த பலர் அங்கு ஏமாற்றமடைந்திருக்கின்றனர். டட்லி ஜனாதிபதி நாமல் பிரதமர் என்றும் கதைகள் வருகின்றன.