ஞானியும்  ஹக்கீமும் லடாய்!

-நஜீப்-

ஒரு காலத்தில் மு.கா தலைவர் ஹக்கீம்  ரணிலை ஞானி என்றார் ஒப்பற்ற தலைவர் என்றார். ஐக்கிய தேசியக் கட்சியில் முறுகல் உச்சத்தில் இருந்த போது இந்த மனிதனுக்கு ஒன்றுமே புரிவதில்லை என்று ரணிலை ஹக்கீம் திட்டடினார்.

ஞானிக்குத்தானே எல்லா விவகாரங்களும் முன்கூட்டியே தெரிந்து விடுமே.! எனவே எப்படி ரணிலுக்கு ஒன்றும் புரியாமல் இருக்க முடியும்.? இவை எல்லாம் பழைய சமாச்சாரங்கள்.

ஆனால் இந்த இருவரையும் சம்பந்தப்படுத்திப் பாராதூரமான நிகழ்வொன்று சில தினங்களுக்கு முன்னர் நடந்திருக்கின்றது.

ரணிலுக்குச் சொந்தமான ஒரே வீடும் அந்த சம்பவத்தில் எரிக்கபட்டு பாரம்பரிய பொருட்களும் குறிப்பாக பௌத்த நூல்கள் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த சித்திரங்களையும் பௌத்த நினைவுச் சின்னங்கள் எனப் பார்த்து எரித்திருக்கின்றார்களாம்.

இது மு.கா. தலைவர் ஹக்கீம் கட்டி விட்ட ஒரு பொய்யான கதையால் நடந்த அநீயாயம் என்று ரணில் ஊடகங்களில் ஒப்பாறி வைத்திருக்கின்றார்.

என்னடா இது? ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தில் இருந்த நேரங்களில் வேட்பு மனுக்கள் கொடுக்கப்படுகின்ற நேரங்களில் எல்லாம் தனது கட்சிக்காரர்களையும் பகைத்துக் கொண்டு ரணில் ஹக்கீமுக்கு அள்ளித்தானே கொடுத்து வந்தார். என்னடா இப்படியும் ஒரு துரோகமா!

நன்றி:17.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஜனாதிபதி யார்?      என்ன நடக்கும்?

Next Story

ரணிலுக்குப் பதில் உறவினர் ருவன் MP