ஞானம் மீது திடீர் பாசம்!

நஜீப்

நன்றி 22.11.2026  ஞாயிறு தினக்குரல் 

Hate Speech Star BBS Gnanasara In Action - Colombo Telegraph

ஞானசாரத் தேரர் தேசிய ஒற்றுமைக்கும் முஸ்லிம் மக்களுக்கும் கொடுத்து வந்த தொந்தரவுகளை முழு உலகமும் அறியும். தமது சமூகத்தின் சார்பில் இதற்காக வழக்குப் பதிவு செய்தவர்களே இந்த முஜிபர் ரஹ்மானும்  அசாட் சாலியும்தான்.

வழக்கு போய்க் கொண்டிருக்கின்ற ஒரு கட்டத்தில் இந்த இருவரும் ஞானத்தாருக்கு மன்னிப்பு வழங்கத்தயாரானாலும் ஞானத்தின் சட்டத்தரணிகள் அதனை நிராகரித்து விட்டனர்.

Gnanasara Thero seeks fresh presidential pardon after Supreme Court ruling - Pulseline.lk

முஜிபர் பிரதிநிதித்துவம் செய்கின்ற சஜித் அணியும் சாலி இருக்கும் ரணில் தரப்புக்களும் இன்று இந்த அரசு பௌத்த சமயத்தை மதிப்பதில்லை அத்துடன் தேரர்களுக்கு தொந்தரவும் செய்கின்றன என்றும் சாடிவருகின்றன.

Case against Gnanasara Thero postponed (Update) | Sri Lanka Mirror

தமது தலைமைகளைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதால் இந்த இருவரும் பல்டியடித்து ஞானத்துக்கு பாசக்கரம் நீட்டினார்களோ என்று நமக்கு ஒரு சின்ன சந்தேகம்.

அடுத்து சாலியின் உறவுக்காரி ஒருவருக்கு வைத்திய செலவுகளை தான் பார்த்ததாக ஞானமே ஒருமுறை நினைவுகூர்ந்திருந்ததும் தெரிந்ததே.!

Previous Story

சீனாவால் வானத்திலிருந்து வரும் ஆபத்து!

Next Story

டிரம்பை வீழ்த்திய வீரன் புட்டின்