ஞானம் கர்ளாவி சவுதி!

நஜீப்

சவுதி அரோபிய தூதுவராலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் முக்கிய பிரமுகராக அழைக்கப்பட்டிருந்தார் ஞானசாரத் தேரர். இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப் பெரிய இனவாத பரப்புரைகளை கடந்த காலங்களில் முன்னெடுத்து வந்தவர்தான் ஞானம்.

இவர் அல்லாஹ்வையும் புனித குர்ஆனையும் கூட கடுமையாக கேவலப்படுத்திப் பேசி இருந்தது சர்வதேச இஸ்லாமிய உலகம் நன்கு அறியும். இவர் அந்த வைபத்தில் கலந்து கொண்டு சவுதி முக்கியஸ்தர் அருகில் நின்று புரியானி சுவைத்தது ஒரு செய்தியே அல்ல.

காரணம் இந்த ஞானத்துக்கு சுடு சொரனை வெக்கம் ரோசம் எதுவம் கிடையாது. அவர் ஒரு அறிவுபூர்வமான ஆளே கிடையாது என்று நாம் துவக்க முதலே சொல்லி வந்திருக்கின்றோம். இது பற்றி பேரினத்து சமூக ஊடகங்கள் நையாண்டி பண்ணி ஞானத்திடம் கேள்வி எழுப்பிய போது அந்த விமர்சனங்களை அவர் கண்டு கொள்ளப் போவதில்லை என்றும் பதில் கொடுத்து சமாளித்திருக்கின்றார்.

ஆனால் இவரை அந்த விழாவுக்கு அழைத்து அழகுபடுத்த சவுதி ஏன் முன்வந்தது என்று விவகாரத்தில் பல சந்தேகங்கள் இருக்கின்றன. சில தினங்களுக்கு முன்னர் இயற்கை எய்திய நம்பர் வன் இஸ்லாமியப் பேரரிஞர் யூசுப் கர்ளாவி சவுதி இஸ்ரேலுடன் இணைந்து நடாத்திய இஸ்லாமிய விரோத செயல்பாடுகள் பற்றி நிறையவே கதைகள் சொல்லி இருந்ததும் தெரிந்ததே.

நன்றி: 02.10.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

அதிகார வர்க்கம் சமூக ஊடகங்களுக்கு அச்சப்படுவது ஏன்!

Next Story

இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம்: விகாராதிபதிக்கு கடும் நிபந்தனைகளுடன் பினையில் செல்ல அனுமதி