ஜோர்டான் 27 கடத்தல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஜோர்டான் ராணுவ வீரர்கள் எல்லை பகுதியில் நடத்திய தாக்குதலில் 27 கடத்தல்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.மேற்காசிய நாடான சிரியாவில் 2011ம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளுக்காக செல்கின்றனர். இதன்படி அதன் அண்டை நாடான ஜோர்டானில், சிரியாவில் இருந்து 6.5 லட்சத்திற்கும் அதிகமானோர் தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையே இருநாட்டு எல்லை பகுதியில் போதைப் பொருள் கடத்தல்காரர்களின் ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.சமீபத்தில் ராணுவ வீரர்களுக்கும், கடத்தல்காரர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஒரு ராணுவ அதிகாரி உயிர்இழந்தார்.

இந்நிலையில் நேற்ற சிரியாவில் இருந்து ஜோர்டான் எல்லைக்குள் கடத்தல்காரர்கள் நுழைய முயற்சித்தனர். ராணுவத்தினர் எச்சரித்தும் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.இதையடுத்து ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 27 கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து அதிக அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Previous Story

பிரதமர் விவகாரம் பொய் பேசுவது யார்?

Next Story

வட கொரியா 6 வது சோதனை !!!