நஜீப்
நன்றி: 31.05.2026 ஞாயிறு தினக்குரல்
ஈழ விடுதலைப் போராட்டத்தில் உமா மகேஸ்வரனின் புளொட் இயக்கமும் இருந்தது. புளொட் இடதுசாரிப் போக்குடையது. இதனால்தான் பலஸ்தீனத்தில் போய் பயிற்சி எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அண்மையில் அதன் முக்கிஸ்தர் சித்தார்த்தர் பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இது பழைய கதை சிலருக்கு இது ஏற்கெனவே தெரிந்த விடயம்தான். மாலை தீவைக் கைப்பற்ற புளொட் முயற்சியும் நடந்தது. அதில் நமது ஆட்கள் எழுபத்தி ஆறு பேர் அங்கு கைதானார்கள்.
ஜனாதிபதி கையுமை தூக்கி விட்டு நமக்கு நெருக்கமான லுத்துபியை பதவிக்கு அமர்த்துவதும் அதன் மூலம் அங்குள்ள ஒரு தீவில் தமது இராணுவ முகாமை அமைக்கும் திட்டமும் இருந்தது.
ஜேவிபி.க்கு வன்னியில் நாம் பயிற்சி கொடுத்தோம். விஜேவீரவுடன் புளொட்டுக்கு அன்று உறவு இருந்தது. பிரபா-உமா முரண்பாடு பற்றியும் சித்தார்த்தர் குறிப்பிட்டதுடன், இங்கு ஒரு தனி நாடு உருவாவதை இந்திய ஒரு போதும் ஏற்காது என்றும் அடித்துக் கூறுகின்றார்.




