ஜெலன்ஸிக்கு பெரும் ஏமாற்றம்!

-யூசுப் என் யூனுஸ்-

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நேட்டோ நாடுகளில் தீர்க்கமான கூட்டம் லிதுவேனியாவில் நடைபெற்றது. அதில் உக்ரைன் தனக்கு பூரண அங்கத்துவம் கிடைக்கும் என்று நம்பி இருந்தது. ஆனால் தற்போதைக்கு உக்ரைனுக்கு இதற்கான சந்தர்ப்பம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருகின்றது.

இதனால் ஜெலன்ஸ்கி நம்பிக்கையை இழந்து பெரும் வெறுப்பில் பேசி இருந்தார். தான் கடுமையான வார்த்தைகளை பேசியதற்காக இன்று அதற்கு வேறு மன்னிப்பும் கேட்டிருக்கின்றார். போதியளவு ஆயுதங்களைத் தருகின்றோம் சண்டையைத் தொடருங்கள் என்பதுதான் அவர்கள் உக்ரைனுக்கச் சொன்ன செய்தியாக இருக்கின்றது.

அதே நேரம் சுவிடனுக்கு எக்காரணம் கொண்டும் நேட்டோவில் சேர இடம் கொடுக்க அனுமதிக்க மாட்டேன் என்று நின்ற துருக்கிய அதிபர் எர்டோகன்  தனக்கு ஐரோப்பிய யூனியனில் இடம் தந்தால் தனது பிடியைத் தளர்த்துவேன் என்று செல்ல, நேட்டோவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் தொடர்பு இல்லை என்றாலும் அவருக்கு ஐரோப்பிய யூனியனில் இணைந்து கொள்ள ஏதோ வழிகளில் பச்சைக் கொடி காட்டப்பட்டதால். சுவிடன் கரை சேர்ந்திருக்கின்றது. பிந்திய தகவல்படி துருக்கிய நாடாளுமன்ற ஒப்புதல் வரை காதிரு என்று சொல்லப் பட்டிருக்கின்றது.

நன்றி: 16.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பசில் நாமல் பின்வாங்கள்!

Next Story

பாரதூரமான குற்றச்சாடுக்கள்!