ஜி.எல்.பீரிஸ் பகீர் தகவல்! குழம்பியுள்ள அமைச்சர்கள்

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) சிறப்பாகவே செயற்படுகின்றார், ஆனால் அமைச்சர்கள் சிலர் குழம்பி போயுள்ளனர் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (G.L.Peiris) தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை (24-01-2022) கொழும்பில் இடம்பெற்ற ஊடாக சந்திப்பின் போதே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

இன்று நம் நாட்டில் மட்டும் அல்ல உலக நாடுகளில் கொரோனா (Covid19) தொற்று காரணமாக மக்கள் அனைத்து அன்றாட தேவைகளிலும் சிக்கலாவே இருக்கிறது.

நம் ஜனாதிபதி நாட்டின் பிரச்சனை தீர்த்து வைப்பதற்காக, கொரோனா தடுப்பூசி வழங்குவதில் பெரும் பங்களிப்பை வழங்குகிறார்.

உலக நாடுகளும் ஏற்றுக் கொள்ள கூடிய வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் காணப்படுகிறது. நம்மில் பல பிழைகள் காணப்படுகின்றன. அவற்றை திருத்தி கொள்ள வேண்டும்.

இருப்பினும் இங்கு ஒரு அமைச்சர் இன்னும் ஒரு அமைச்சரை குறை சொல்ல மட்டுமே உள்ளனர். இந்த அரசாங்கம் சிறப்பாக செயற்படுகிறது. இவற்றை கட்டி எழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

நாட்டை கட்டி எழுப்ப சிறந்த வழி முறை ஒன்றை ஜனாதிபதி வழிநடத்த உள்ளார் அதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றார்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

மின்சார பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றிருந்தது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மின்சக்தி அமைச்சர், எரிசக்தி அமைச்சர், கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் மின்சார சபை சேவையாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம் இயங்காமை காரணமாக இன்று நான்கு கட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் ஒரு மணித்தியால மின் துண்டிப்பு மேற் கொள்ளப்படவுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Previous Story

இஸ்லாம் புத்தகங்கள் OUT

Next Story

மூழ்கும் நிலையிலிருந்த இலங்கையை தக்க நேரத்தில் மீட்டெடுத்த இந்தியா!