நஜீப்
நன்றி:25.01.2025 ஞாயிறு தினக்குரல்
நந்தன குனதிலக: ஒரு விவசாயப் பட்டதாரி. மூன்று முறை ஜேவிபி. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஒரு முறை அமைச்சராகவும் இருந்தார்.
1999ல் ஜேவிபி தனது ஜனாதிபதி வேட்பாளராக இவரையே களமிறக்கியது. அந்த நேரமும் இவர் மார்பு புற்றுநோயாளியாக இருந்ததாக நமக்கு ஞாபகம்.
பிற்காலத்தில் ஐதேவு.க்கு தாவி. ஜேவிபி.யை கடுமையாக விமர்சித்து வந்தார். சில காலம் பாணதுறை நகரசபை தவிசாளராகவும் இருந்தார்.
இந்த அரசாங்கம் தேர்தல் காலங்களில் மக்களுக்கு கொடுத்திருந்த ஒரு முக்கியமான வாக்குறுதி முன்னாள் ஜனாதிபதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற பென்சனை இரத்துச் செய்வது என்பது. அரசைக் கைப்பற்றிய என்பிபி. இதற்கு நடவடிக்கை எடுத்தது.
அப்படி ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படுமாக இருந்தால் எனக்கு வாழ வழியில்லை. திட்டம் அமுலுக்கு வருமாக இருந்தால் நான் தற்கொலைத் தாக்குதல் (ஜிஹாதி) நடாத்துவேன் என்றும் இவர் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
ஆனால் மனிதன் (63) இயல்பாகவே இயற்கை ஏய்திவிட்டார்.





