-யூசுப் என் யூனுஸ்-
ட்ரம்ப் நாட்டை துண்டாட முனைகிறார் பெரும் குற்றச்சாட்டு!
சட்டத்தை அமுல்படுத்துங்கள் அல்லது நாயை அவிழ்ப்பேன்!
அமெரிக்க சரித்திரத்தில் பங்கரில் ஒலித்து ட்ரம்ப் சாதனை!
மீண்டும் ட்ரம்பே வெற்றி என வந்தால் நாட்டில் இனவாதம்!
பேசத் தெரியாதா வாயை இறுக்கி மூடத் தெரிய வேண்டும்!
செவ்விந்தியருக்குச் சொந்தமாக இருந்த அமெரிக்காவை எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரர்கள் ஆக்கிரமித்து ஆட்சிசெய்யும் கதைகள் அனைவரும் அறிந்ததுதான். எப்படியோ இன்று அமெரிக்க குடித்தொகையில் வெள்ளையர் பெரும்பான்மை. இதனை இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் அமெரிக்க குடித்தொகை சதவீத அடிப்படையில்: 75 வெள்ளையர் 13 கறுப்பர். 6 ஆசிய வம்சாவழியினர் ஏனைய 6 சதவீதமானவர்கள் உலகில் ஏனைய பிரதேசங்களில் இருந்து வந்து அங்கு குடியேறியவர்கள். அதாவது 25 கோடி வெள்ளையர்களும் ஏனைய 8 கோடிப்பேர் வெள்ளையர் அல்லாதவர்கள். அதில் கறுப்பர்கள் ஏறக்குறைய 4கோடி50 இலட்சம் வரை.
என்னதான் உலகிற்கு ஜனநாயகம், மனிதாபிமானம், பாதுகாவலன் என்று ஆசான் வேடம் போட்டாலும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் மனித தர்மத்துக்கே கேடுவிளைவிக்கின்ற வகையில் இருந்து வருவதையும் சமகால நிகழ்வுகள் பூராவிலும் நாம் உலகில் பார்த்து வருகின்றோம். இப்போது அமெரிக்காவின் பிடியில் இருந்து உலகம் மீண்டெழுகின்ற நிலையும் தெளிவாகத் தெரிகின்றது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக தற்போது அமெரிக்காவுக்கு அதிபராக இருக்கின்ற டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க வரலாற்றிலே மிகவும் அசிங்கப்பட்ட ஜனாதிபதியாகவும் கோமாளியாகவும் செலாற்றி வரும் இந்த நேரத்தில் அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகளும் நிருவாக ரீதியில் அவர் செயல்களும் வார்த்தைகளும் உலகத்தார் முன்னிலையில் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கின்றது. சீனாவுக்கு எதிரான குறிப்பாக கொரோனா விவகாரத்தில் அமெரிக்க மக்கள் உணர்வுகளை வைத்து அவர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தென் சீனாப் பிராந்தியத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருவது பற்றி நாம் கடந்த வாரமும் பேசி இருந்தோம்.
இந்தப் பின்னணியில் அமெரிக்காவில் நடந்த ஒரு படுகொலை முழு நாட்டையும் ஸ்தம்பிதமாக்கி விட்டது. மொத்தமுள்ள 50 மாநிலங்களில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஊரடங்குச் சட்டம். 150 வரையிலான நகரங்கள் பற்றி எறிகின்றன. கடந்த 50 வருடங்களுக்குப் பின்னர் இப்போது மிகப் பெரிய வன்முறை அங்கு நடந்து கொண்டிருக்கின்றது. மக்கள் உரிமை இயக்கத் தலைவர்
மாட்டின் லூத்தர் கிங் படுகொலையைத் தொடர்ந்து அன்று இதே போன்றுதான் அமெரிக்கா பற்றி எறிந்தது. மாட்டின் லூதர் கிங் என்ற புகழ்பெற்ற சிவில் சமூகச் செயல்பாட்டுக்காரர் அங்குள்ள கறுப்பினத்தவர்களுக்கு கணிசமான உரிமைகளை வென்று கொடுத்த மாபெரும் தலைவர். இதனால் இன்றும் அவர் கறுப்பினத்தவர் மத்தியில் ஜனரஞ்சகமான தலைவராக உலகம் பூராவிலும் மதிக்கப்படுகின்றார். அமெரிக்க கறுப்பர்களுக்கு அவர் இன்றும் ஒரு ஹீரோ.
அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு பாகுபாடுகள் காட்டப்பட்டு வருவது வழக்கமான விவகாரமாக இருந்து வருகின்றது. ஆனால் வேடிக்கை என்னவென்றால் உலகில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்ற நாட்களில் மட்டும் அனைத்து அமெரிக்கார்களும் கறுப்பினர் வீரர்கள் பற்றி பேசுவார்கள் கதைப்பார்கள் அவர்களுக்காக கை தட்டுவார்கள். அமெரிக்க கறுப்பர்களே அமெரிக்காவுக்கான முழு ஒலிம்பிக் பதக்கங்களை வென்று வருவதால் அவர்களுக்கு அப்போது இந்தக் கௌரவம்.
இப்போது உலகம் பேசுகின்ற ஜார்ஜ் ஃப்ளாய்ட் சம்பவத்தக்கு வருவோம். டெக்சாஸ் மாநிலம் ஹ_ஸ்டன் நகரில் பிறந்து வளர்ந்த ஜார்ஜ் ஒரு பட்டதாரி. தொழில் நிமித்தம் அவர் மின்னெசொட்ட மாநிலத்துக்கு இடம் பெயருந்திருந்தார். குறித்த தினம் வழக்கம் போல் அவர் அங்குள்ள மின்னிய பொலிஸ் நகரிலுள்ள ஒரு கடைக்குள் சிக்ரெட் வாங்குவதற்காக நுழைந்து கடை சிப்பந்;தியிடம் 20 பெறுமதியான டெலரை நீட்டினார். அதனைப் பொற்றுக் கொண்ட இளவயது சிப்பந்தி அந்த டொலர் நோட்டு போலியானது என்று நினைத்து ஆளும் மதுபோதையில் இருக்கிறார் என்று உடனே பொலிசாருக்கு தொலைபேசி அழைப்புக் கொடுத்தார்.
அந்த அழைப்பைத் தொடர்ந்து 7 நிமிடங்களில் பொலிஸார்; வாகனத்தில் அங்கு வந்து இறங்கினார்கள். அந்த நேரத்தில் கூட ஜார்ஜ் ஃப்ளாய்ட் சிக்ரெட் வாங்கிய கடைக்கு முன்னால் தனது காரை நிறுத்திக் கொண்டு அதில் தனது சகாக்கள் இருவருடன் கதைத்துக் கொண்டிருந்தார். அவர் காருக்கு அருகில் சென்ற பொலிஸ் ஜார்ஜ் நெற்றியில் துப்பாக்கியை வைத்தது. மனிதன் திகைத்துப்போய் என்ன இது எனக் கேட்பதற்குள் பொலிஸ் அவர் கையில் விலங்கை மாட்டி ஆளை வெளியே இழுத்து எடுத்தது. அப்போது மனிதன் தடுக்கி விழ 44 வயதுடைய டெரெக் சாவ என்ற பொஸ்காரர் தனது இடது கால் முட்டியை விலங்கிடப்பட்டிருந்த ஜார்ஜ் களுத்தில் அழுத்தமாக நசித்துக் கொண்டிருந்தார்.
அவர் 10 முறைக்கு மேல் என்னால் மூச்செடுக்க முடியாதிருக்கின்றது என்று கதறி இருக்கின்றார். பக்கத்திலிருந்த பொது மக்கள் பலர் அந்தக் காட்சிகளையும் அவரது அபலக் குரலையும் தமது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் தன்னை அறியாமலே சிறுநீர்கூடக் கழித்திரு;தார். அவர் கண்களில் இருந்து நீர் வடிந்திருந்தது என்பதனை அந்தப் பதிவுகளில் பார்க்க முடிகின்றது. சரியாக 9 நிமிடம் 46 நொடிகளில் டெரெக் சாவ தனது வலதுகாலை ஜார்ச் களுத்திலிருந்து எடுக்ககும் போது திடமான அந்த மனிதன் மூர்ச்சையாகி இருந்தார். வேடிக்கை பார்த்து ஏனைய பொலிசாரும் பொது மக்களும் அந்த உடம்பை வண்டியில் ஏற்றி வைத்தியசாலைக்கு எடுத்தச் சென்றார்கள். வைத்தியர்கள் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணமாயிருப்பதை அந்தப் பொலிசாருக்குத் தெரிவித்தார்கள். சிப்பந்தியின் ஒரு சிறு சந்தேகமும் கொடூரமான வெள்ளையினப் பொலிசாரின் முரட்டுத்தனமும் இன்று அமெரிக்காவைத் தீச்சுவளையாக்கி இருக்கின்றது. பற்றி எறிகின்றது அமெரிக்கா.
இவை எல்லாவற்றையும் விடக் கொடூரம் என்னவென்றால் இந்த நிகழ்வைத் தொடர்ந்து மக்கள் கொதித்தெழுந்த போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடந்து கொண்ட முறைதான் முழு அமெரிக்காவுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கின்றது. நாமும் கடந்த சில வாரங்களில் எழுதிய பல கட்டுரைகளில் அமெரிக்கா அதிபரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வந்திருக்கின்றோம். இது எமது அமெரிக்க விரோதப்போக்கு என்பததை விட ட்ரம்பின் அட்டகாசங்கள் தொடர்பான நமது சாடல்களாகவே வாசகர் பார்க்க வேண்டும்.
அமெரிக்க மக்கள் ஜார்ஜ் ஃப்ளாய்ட் சம்பவத்துக்குப் பின்னர் ட்ரம்பை மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்கின்றார்கள் என்றால் அமெரிக்காவில் இனவாதத்துக்கு நல்ல வரவேற்பும் கௌரவமும் இன்னும் மக்கள் மத்தியில் இருக்கின்றது என்றுதான் உலகம் பார்க்க வேண்டும். என்பது எமது கருத்து. இப்படியான ஒரு அட்டகாசமான மனிதனை மீண்டும் அமெரிக்க மக்கள் தங்களது நாட்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்கின்றார்கள் என்றால் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அழிவும் ஆபத்தும் காத்திருக்கின்றது என்பதனையும் நாம் முன்கூட்டிச் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.
இப்போது பெரிய வன்முறைக்கு மத்தியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் அடக்கம் நடந்திருக்கின்றது. அரசியல் நோக்கர்கள் கருத்துப்படியும் எமது பார்வைப்படியும் மாட்டின் லுதார் கிங் படுகொலை வன்முறைகளை விட மிகப் பெரிய அழிவு அமெரிக்காவுக்கு இந்த கொலையால் ஏற்பட்டிருக்கின்றது. கொரோனா நாட்டுக்குள் அத்தமீறிப் போனதற்கும் டம்ரப் எப்படி நேரடியாகக் காரணமாக இருந்தாரோ அதே போன்று ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலை விவகாரத்தில் அமெரிக்க ஜாதிபதி ட்ரம்ப் வார்த்தைகள் நடத்தைகளுமே அங்கு பெரும் வன்முறை நடக்கக் காரணமாக இருந்தது என்பது நமது மற்றுமொரு குற்றச்சாட்டு.
அந்த 20 ரூபா பெறுமதியான அமெரிக்க நோட்டைப் பெற்ற கடை உரிமையாளர் அபுமேயல்லா ஜார்ஜ் ஃப்ளாய்ட் பற்றிக் குறிப்படும் போது அவர் ஒரு நல்ல மனிதர் எப்போதும் அவர் சிரித்த முகத்துடனே எங்கள் கடைக்கு வந்து போவார். அவர் ஒரு தப்பான செயல்களைப் பண்ணுகின்ற மனிதன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. எனது இளவயது சிப்பந்திதான் அவர் விவகாரத்தில் தப்புக் கணக்குப் போட்டிருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன் என்று ஊடகங்களுக்கு கருத்துக் கூறி இருக்கின்றார். ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை செய்த டெரெக் சாவின் மனைவி தனது கணவரின் செயல் தனக்கும் குழந்தைகளுக்கும் மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கின்றது எனவே நான் அவமானம் காரணமாக கணவனிடமிருந்து விவகாரத்துக் கோர இருக்கின்றேன் என்று அறிவித்திருக்கின்றார்.
ஒரு சாதரண இராணுவ அதிகாரரி பேசத் தெரியாவிட்டால் வாயை மூடிக் கொண்டு அடக்கமாக இருந்து கொள்ள ஜனாதிபதி ட்ரம்ப் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக ஊடகங்களில் பேசி இருந்தார். மக்களை சுட்டுத்தள்ளுங்கள் என்ற ட்ரம்ப் பேச்சுக்கு இராணுத்தின் பதிலாக இதுவாக இருந்தது. இதற்கு முன்னரும் தமக்கு இடையூறு பண்ணும் ஈரானியப் கடற்படைப் படகுகளை சுட்டுத்தள்ளுங்கள் என்று சில வாரங்களுக்கு முன்னர் அதிபர் ட்ரம்ப் கட்டளையிட்ட போதும் இதே விதமாகத்தான் அமெரிக்க கடற்படைகள் அப்போது நடந்து கொண்டு அதிபரின் கட்டளையைக் கண்டு கொள்ளவேயில்லை. எனவே அமெரிக்க அதிபரின் கட்டளைகளை படையினரும் அதிகாரிகளும் இப்போது மதிப்பதில்லை என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது அமெரிக்க அதிபருக்கு மிகப் பெரிய அவமானம். ஆனால் அதுவும் எருமை மாட்டின் மீது மழை பொழிகின்ற விவகாரமாகவே அவரைப் பொறுத்த வரை இருக்கும். அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையைச் சுற்றி வளைத்து நின்றபோது அவர் மாளிகைளில் இருக்கும் பதுங்கு குழிக்குள் சில மணித்தியாலங்கள் ஓடி ஒழிக்க வேண்டி இருந்ததும் தெரிந்ததே. இப்போது நான் அங்கு போய் ஓடி ஒழிக்கவில்லை ஏதும் தேவைகள் ஏற்பட்டால் அதனைப் பாவிப்பது பற்றி ஒருமுறை பரிசோதிக்கத்தான்; அங்கு போய் வந்தேன் என்றும், வழக்கத்துக்கு மாறாக அன்று வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் அதிகமான இராணுவத்தினர் காவலுக்கு அழைக்கப்பட்டிருந்ததும் உண்மை என்றும் ட்ரம்ப் நேரடியாக பெக்ஸ் நியூஸ_க்கு அளித்த போட்டியில் சொல்லி இருந்தார். டரம்ப் பங்கரில் ஒழித்த கதையை நியூயோர்க் டைம்ஸ் முதலில சொல்லி இருந்தது. வெள்ளை மாளிகையில் பணிபுரிகின்றவர்களே இந்தக் கதையை வெளியில் சொல்லி இருக்க வேண்டும். இங்கும் உளவாளிகள் இருக்கின்றார்கள் என்றும் ட்ரம்ப் இப்போது அங்கலாய்க்கின்றார்.
பங்கர் கதைக்கு அடுத்த நாள் வெள்ளை மாளிகைக்கு முன்னால் அமைந்திருக்கின்ற தேவாலயத்தக்கு சென்ற ஜனாதிபதி ட்ரம்ப் பைபிலை கையில் எடுத்துக் கொண்டு ஊடகங்களுக்கு போஸ் கொடுத்திருந்தார். வெள்ளை மாளிகையில் இருந்து நேரடியாக கால்நடையாக சென்.ஜோன்ஸ் தேவாலயத்துக்கு போன அவர் இது தான் அச்சமின்றி வெள்ளை மாளிகையில் இருப்பதைக் காட்ட நடத்திய ஒரு நாடகம். அத்துடன் அமெரிக்க என்பது இன மதப் பகுபாடு அற்ற நாடு என்பதனை அதிபர் ட்ரம்ப் தனது செயலால் கொச்சைப்படுத்தி இருக்கின்றார் என்றும் குற்றச்சாட்டப்படுகின்றது. தேவாலயத்துக்கு அதிபர் திடீரென போவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை படையினர் கண்ணீர் குண்டுகளை வீசி களைத்து அந்த இடத்ததை மக்கள் சூன்னியப் பிரதேசமாக்கி இருந்தனர். புதிய தகவல்படி டரம்ப் தனது மனைவி ஒரு மகன் ஆகியோருடன் பதுங்கு குழியில் மறைந்திருந்தார் என்பதனை அமெரிக்க உளவுத்துறையே தற்போது உறுதி செய்திருக்கின்றது.
ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்காவைத் துண்டாட முனைக்கின்றர் என்ற பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார் ஜேம்ஸ் மெற்றிஸ். இவர் யார் என்று சற்றுப் பாருங்கள். அமெரிக்காவின் முன்னாள் முப்படைகளின் தலைவராகவும் சில வருடங்களுக்கு முன் இதே ட்ரம்ப் நிருவாகத்தில் பாதுகாப்புச் செயலாளராகவும் இவர் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. ட்ரம்ப் நடவடிக்கைகள் தனக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் இவர் சில வருடங்களுக்கு முன்னர் தனது பதவியை இராஜினாமச் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப்புடன் ஒத்துப்போக மறுக்கும் அடுத்த நபர் பற்றியும் கேளுங்கள். மார்க் எக்ஸ்பர் இப்போது இவர்தான் ட்ரம்ப்பின் பாதுகாப்புச் செயலாளர். ஜனாதிபதியின் தீர்மானங்களில் எனக்கு உடன்பாடுகிடையாது என்று அவரும் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார். அப்படியானால் ட்ரம்ப் தற்போது செல்லாக் காசா என்று கேட்கத் தோன்றுகின்றது. ஆனால் ட்ரம்புக்காக வக்காளத்து வாங்குகின்ற மைக் பம்பியோ போன்ற சிலர் படைகளுக்குக் கட்டளையிடும் அதிகாரம் வெள்ளை மாளிகைகுத்தான் இருக்கின்றது என்று கூறி வருகின்றார்கள். 1807 இயற்றப்பட்ட ஒரு சட்டப்பிரகாரம் மாகாண ஆளுநர்கள் அங்கிகாரத்துடனே உள்நாட்டில் படையினர் செயல்பாடுகளுக்கு அதிகாரம் வருகின்றது.
சீன-ஹொங்கொங் விவகாரத்தில் ஆர்ப்பாட்டகாரகள் செயல்பாடுகளை பாராட்டும் வகையில். அது அழகான காட்சிகள் என டரம்ப் கையாள் நன்சி பிலெசி குறிப்பிட்டிருந்தார். குலோபல் டைம்ஸ் என்ற புகழ் பெற்ற சீன ஊடகத்திடம் அமெரிக்க இரட்டை வேடம் இப்போது நல்ல காட்சிகளாக உலகமே பார்த்து ரசிக்கின்றது என்று ஹெங்கொங் ஆளுனர் கெரிலேம் அம்மையார் குறிப்பிட்டிருக்கின்றார். சீன வெளிவிவகாரத்துக்கு பொறுப்பான குவா சிங் கிங் எங்கே உங்கள் மனித உரிமை சமத்துவம். தனது குடிமகன் சுவசிக்க 10 முறைக்கு மேல் கதறியும் அதற்கு அமெரிக்காவில் இடமில்லையே என்று ட்ரம்ப் நிருவாகத்தை நையாண்டி பண்ணி இருக்கின்றார் அவர். ஐ.நா. அமெரிக்க நிகழ்வுகளை வன்மையாகக் கண்டித்திருக்கின்றது. பாப்பாண்டவர்கூட இந்த அடக்குமுறையைக் கண்டித்திருக்கின்றார்.
இதற்கிடையில் வெள்ளத்தில் சிக்குண்டவன் துரும்பின் உதவியுடனாவது கரை சேர முனைவதுபோல இப்போது அமெரிக்க இந்தியாவின் களுத்தில் தொங்க முனைகின்றது. ஏறக்குறைய சீன, ர~;யா, வட கொரியா, துருக்கி, ஈரான் என்பன அமெரிக்க விவகாரங்களில் ஓரணி என்ற நிலையில் இருக்கும் போது இந்தியாவுக்கு பாதுகாப்பு விவகாரங்களில் ஒரு நம்பிக்கை தேவை என்று எடுத்தக் கொண்டாலும் ட்ரம்பை நம்பி இந்திய அப்படியான முடிவுகளை இந்த நேரத்தில் எடுக்கக் கூடாது. இப்போது அமெரிக்க வன்முறையும் சீன-இந்திய எல்லை முறுகலும் சற்றுத் தனித்திருப்பதுபோல் தெரிகின்றது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நெருப்புடன் விளையாடுகின்றார் என்று நியூயோர்க் டைம்ஸ் தனது ஆசிரிய தலைப்பில் இறுதியாகச் சொல்லி இருக்கின்றது.