ஜாமியுல் அஸ்ஹர் SDEC நிருவாகிகள்-2022

இன்று 16.02.2022 ம் திகதி புதன் கிழமை  கண்டி-உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி   அதன் வருடாந்த அபிவிருத்திச் சங்கப் பொதுக் கூட்டத்தை நடாத்தியது. கல்லூரியில் அமைந்துள்ள அஷ்ரஃப் கேட்போர் கூடத்தில்  அதிபர் அசாட்கான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் 2022ம் ஆண்டு நடப்பு வருடத்துக்கான நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

ED/01/12/07/02/01 இலக்க 2018.06.22 மற்றும் திருத்திய  19/2019 இல-2019.04.09 திகதி சுற்று நிருபத்துக்கு அமைவாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை 31.03.2022ம் திகதிக்கு முன்னர் நடாத்தி முடிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு சம்பந்தப்பட்ட நிருவனங்களை கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதன் படி:-

பெற்றோரில் இருந்து   6 பேர்.

பழைய மாணவர்களில் இருந்து 2 பேர்.

கல்லூரி அதிபர் 1.

வலயக் கல்வி அதிகாரி 1.

ஆசிரியர் குழாத்தில் இருந்து 6 பேர்.

என மொத்தம் 16 பேர் தெரிவு செய்ய வேண்டி இருந்தது.

ஆசிரியர் குழாத்திலிருந்து

1.M.I.M.ஜிப்ரி பிரதி அதிபர்

2.M.S.M. நௌஷாட் ஆசிரியர்

3.A.A.S.அஸ்ரா ஆசிரியை பொருளாலர்

4.A.W.உம்மு ஐன்ஆசிரியை

5.M.T.F.ரிசானா ஆசிரியை

6.S.R.F.இஷானா ஆசிரியை ஆகியோர் தெரிவாகி இருந்தனர்.

பெற்றோர்களில் இருந்து இன்றைய தினம் ஆறு பேர் தெரிவு செய்யப்பட்டனர். செயலாளர் உட்பட அனைத்துத் தெரிவுகளும் ஏகமனதாக அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதன் படி பெற்றோர்கள் சார்பில்

01.சாபி சிஹாப்தீன் செயலாளர்

02.எம்.எச்.எம். முபாரக் பி.உ.

03.ஐ.எம்.இப்திகார் முன்னாள் பி.உ

04.ஏ.எல்.எம்.நவாப்தீன்

05.எஸ்.அமீருள் அரபாத்

06.எம்.ரிஷாட் மொஹம்மட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்

பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகளின் உறுப்பினர்கள் பற்றிய  தகவல் கேட்ட போது அவர்கள் தெரிவு இன்னும் நடைபெறவிலை என்று தெரிய வருகின்றது. அவர்கள் பற்றிய விபரங்கள் கூடியவிரைவில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று கூட்டம் நடைபெற்ற போது சிரேஷ்ட ஆசிரிய ஆலோசகர் சிபார் மரிக்கார், கல்லூரி அதிபர் எம்.வை.எம்.அசாட்கான், வலயக்கல்வி அதிகாரி பௌசுல் ரஹ்மான் ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்கின்றனர்.

புதிய செயலாளர் சாபி சிஹாப்தீன் சபையோருக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இந்த வருடம் கல்லூரியின் நூற்றாண்டு (1921-2021) விழாக்கள் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Story

இரண்டு அரசியல் கட்சி சின்னங்கள் நீக்கம்

Next Story

''உங்களின் பிள்ளைகள் உயிருடன் இல்லை" - நீதி அமைச்சர்