ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி கனிஸ்ட பிரிவு புணருத்தாபனம்! பெற்றோர் நேரடியாக களத்தில்

கண்டி-உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியின் கனிஸ்ட பிரிவு நெடுங்காலமாக சிதைவடைந்து காணப்பட்டதால் அங்கு கல்வி பயில்கின்ற மாணவர்கள் பல வருடங்களாக சிரமங்களை அனுபவித்து வந்தனர்.

இதனை எவரும் கண்டு கொள்ளவும் இல்லை. இந்த விவகாரத்தை அங்கு கல்வி பயில்கின்ற மாணவர்களின் பெற்றோர்களிடத்தில் தொடர்ச்சியாக புதிதாக கனிஸ்ட பிரிவுக்குப் பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட்டிருக்கின்ற பாஹீரா ஹனூன் ரமீஸ் சுட்டடிக் காட்டி, இதனை புணர் நிர்மாணம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தார்.

அதனைத் தொடர்ந்து கனிஸ்ட பிரிவில் கல்வி பயில்கின்ற 3ம், 4ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கல்லூரி அதிபர் அஸாட் கானின் ஒத்துழைப்புடன் தற்போது புணர் நிர்மானப் பணிகளை நேரடியாகவே அங்கு செய்து வருகின்றறனர்.

இதற்குத் தேவையான நிதியை அங்கு பயில்கின்ற மாணவர்களின் பெற்றோர்களும் பரோபகாரரிகளும் கொடுத்துதவி இருப்பதால் அந்தப் பணிகள் பல இலட்சிம் ரூபா செலவில் தற்போது  பாடசாலை விடுமுறையாக இருப்பதால் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது. மேலும் பெற்றோர்களும் சிரமதானம் மூலம் இப்பணிக்கு ஒத்துழைத்து வருகின்றார்கள்.

மேற்படி கட்டடம்  இந்தக் கிராமத்தில் இருக்கின்ற ஒரு வரலாற்றுச் சின்னமாகவும் கருதப்படுகின்றது. 4500 சதுர அடிகள் பரப்பைக் கொண்ட இந்தக் கட்டடத்தில்தான் கதீஜா மஹாவித்தியாலயம் என்ற பெயரில் பெண்கள் கல்லூரி இயங்கி வந்தது.

முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதற்கு பலத்த கண்டனங்களும் எதிர்ப்பும்  சமூகத்தில் இருந்து வந்த ஒரு சமூகப் பின்னணியில் நமது முன்னோர்கள் தீர்க்கதரிசனமாகவும் துணிவுடனும் எடுத்த தீர்மானத்தால் அன்று நாட்டில் உருவாகிய ஒரு சில முஸ்லிம் பெண்கள் கல்லூரியில் இதுவும் ஒன்றாக அமைந்தது.

இந்தப் பெண்கள் பாடசாலை ஜீ.ஏ.அகமட் ஜெமால் அதிபராக இருந்த காலத்தில் ஆண்கள் பாடசாலையுடன்  இணைக்கப்பட்டு இன்று ஜாமியுல் அஸ்ஹர் தேசிய பாடசாலையாக செயல்பட்டு வருகின்றருது.

ஆங்கிலேயர் காலத்தில் (01.01.1944) கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் அண்மைக் காலம் வரை ஓடுகளில் கூரை அமைக்கப்பட்டிருந்தது. அது அடிக்கடி சேதத்துக்கு இலக்காகி வந்ததால் பிரதேச சபை உறுப்பினராக ஐ.எம். இப்திகார் இருந்த காலத்தில் அவரது முயற்சியால் கூரை பல மில்லியன் ரூபாய்கள் செலவில் முற்றாக சீரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னர் நடைபெறுகின்ற ஒரு பாரிய புணருத்ததாபன நடவடிக்கையாக தரையை முற்றாகச் செப்பனிடும் இந்தப் பணியைக் குறிப்பிடலாம்.

கல்லூரி நூற்றாண்டையும் (1921-2021) கடந்து செல்கின்ற இந்த நேரத்தில் இந்தக் குறைபாடுகள் கூட கவணிக்கப்படாமல் இருந்தது வேதனைக்குரிய விடயமாகும். நிதி நெருக்கடிக்கு அரசு இலக்காகி இருக்கின்ற இந்த நாட்களில் அங்கு பயில்கின்ற சீரார்களின் நலனுக்காக இதற்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பு வழங்கி வருபவர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதுடன்

இந்தக் கட்டத்தில் இன்னும் நிறையவே திருத்தப் பணிகள் இருக்கின்றன. அதனால் நேரடியாக இங்கு வந்து  நடைபெறுக்கின்ற  இந்தப் புனிதப் பணிக்கு தங்களால் ஆன ஒத்தாசைகளை வழங்கி உதவுமாறு பெற்றோரும் பரோபகாரிகளும் ஏனையோரும் கேட்டுக் கொள்ளப்படுக்கின்றனர்.

-தகவல் ரிஸாட் மர்சூக்

 

Previous Story

கடைசி இரு பந்துகளில் ஜடேஜா விளாசிய 10 ரன்களால் 5-வது முறையாக சிஎஸ்கே சாம்பியன்

Next Story

சிறு வயதில் ரொட்டி விற்ற எர்துவான் இன்று துருக்கியின் அசைக்க முடியாத தலைவர்!