-நஜீப்-
நன்றி: 26.01.2025 ஞாயிறு தினக்குரல்

விக்டர் ஐவன் (பொடி அதுல) என்ற ஜனரஞ்சக ஊடகவியலாளர் கடந்த வாரம் மரணித்துவிட்டார். நாம் அறிந்த வரை இலங்கை அரசியலில் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்திய ஒரு ஊடகவியலாளர் இந்த விக்டர்.

1949 பிறந்த அவர் இறக்கும் போது வயது 75. அவரது ராவய பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளை தமிழக்கம் செய்வதற்காக அவ்வப்போது எமக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அப்படியான பல கட்டுரைகளை நாம் ஞாயிறு தினக்குரல் வார இதழுக்கும் எழுதி இருக்கின்றோம்.

நாம் ‘நிஜம்’ வார இதழின் பிரதம ஆசிரியராக கடமையாற்றிய போது அவர் எமக்குத் பக்க துனையாக இருந்தார். ஒரு முறை நாம் அவரை அவரது காலி வீட்டில் சந்தித்த போது தனிப்பட்ட சில விடயங்களைப் பேச முடிந்தது.
அப்போது அவர் கையில் இருக்கும் காயங்கள் பற்றிக் கேட்க, சிரித்துக் கொண்டு 1969ல் விஜேவீர அணியில் இணைந்து, அதில் ஆயுதம் சேகரிப்புக்கு தான் பொறுப்பாக இருந்ததாகவும் சொன்னார்.

இது ஆயுதங்களை பரிசோதிக்கும் போது ஏற்பட்ட காயம் என்றார். கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ‘பெட்ரோல் மெக்ஸ்’ வெடித்து வந்த காயமம் என சொல்லப்பட்டிருக்கின்றது.





