ஜனாதிபதி-ஹக்கீம் ஒப்பந்தம்!

-நஜீப்-

கட்சியில் இருக்கின்ற நான்கு உறுப்பினர்களையும் ஹக்கீம் ஆளும் தரப்புக்கு அனுப்பி வைத்திருந்தார் என்று பல தடவைகள் சுட்டிக் காட்டி இருந்தோம். அவர்களிடையே மோதல்கள் வரும் போது இது பற்றி அவர்களே பகிரங்கமாக நிச்சயம் பேவார்கள் என்றும் சொல்லி இருந்தோம்.

இன்று அது நடந்திருக்கின்றது. சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தலைவர் கேட்டுக் கொண்டதால்தான் நாம் ஆளும் தரப்பில் அமர்ந்தோம். இதற்கான உடன்பாட்டை தலைவர் ஜனாதிபதி ஜீ.ஆருடன் 10.10.2020 திகதி செய்தார். பின்னர் தலைவரது கொள்ளுபிட்டிய வீட்டில் வைத்து பசிலுடன் 18.10.2020 சந்திப்பில் இருபதற்கு வாக்களிக்க அவர் சம்மதமும் தந்தார் என சுற்றாடல் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு சொல்லி இருக்கின்றது.

ஒரு முறை உயிரபத்துக்கு பயந்து கைதூக்கினோம் என்றவர்கள். என்ன இன்று காசுக்குத்தான் டீல் என்று சொல்லவா முடியும்? முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்க அப்படி ஒரு முடிவை அன்று எடுக்க வேண்டி இருந்தது என்று கதை விடவும் இடமிருக்கின்றது. அதனால்தான் கொரோனா முஸ்லிம்கள் மரணங்கள் எரிக்கப் பட்ட போதும் மௌனம் காத்தார்கள் போலும்!

நன்றி: 24.04.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

"புதிய அமைச்சரவை: தலைவலிக்கு தலையணை மாற்றுவது போல" 

Next Story

    இலங்கையை மீட்போம்; 13-ஆவது திருத்தத்தை அமலாக்குவோம் - சஜித் பிரேமதாச