ஜனாதிபதிக்கு 240 மணி நேர அவகாசம்

-நஜீப் பின் கபூர்-

தேர்தல் அறிவிப்புக்கு எதிரான வழக்கு அர்த்தமற்றது

இரு முறை இந்த சந்தேகத்தில் தீர்ப்பு சொல்லியாச்சி

வழக்கில் நமக்கு தொடர்பில்லை-ஜனாதிபதி செயலகம்

இன்னும் பத்தே பத்து நாட்கள் அதனை  மணித்தியாலங்களில் கணக்குச் சொல்வாதாக இருந்தால்  240. இது நமது நாட்டில் பரபரப்பான மணி நேரங்கள் என்றுதான் எமக்குத் தெரிகின்றது. இந்த கால எல்லலைக்குள் ஜனாதிபதி ரணில் என்ன செய்யப் போகின்றார். அதற்கு நாம் எப்படிப் பதில் கொடுப்பது என்று எதிரணியினர் அவதானமாக இருக்கின்றார்கள். நாட்டில் என்ன நடக்கின்றது என்று மக்கள் பரபரப்பில் இருக்கின்றார்கள். நாம் ஏன் இப்படிச் சொல்கின்றோம் என்றால் வருகின்ற பதினேழாம் திகதியுடன் தேர்தல் ஆணைக்குழுவின்  கைகளுக்குள் நாட்டின் அதிகாரம் கை மாறுகின்றது.

அதன் பின்னர் ஏறக்குறைய நாட்டின் நிருவாகத்தை அவர்கள்தான் வழி நடத்துவார்கள். தற்போது இருக்கின்ற ஜனாதிபதி ரணில் தனக்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக் கொண்டு மேற்கொண்ட நடவடிக்கைகளினால் இந்தக் காலப்பகுதிக்குள் அவர் தேர்தல் தொடர்பில் ஏதாவது மக்களின் எதிர்பார்ப்புக்கு ஒவ்வாத நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற அச்சம் பரவலாக நாட்டில் இருந்து வருகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடந்த போது அவர் மேற்கொண்ட அசாதாரண நடவடிக்கைகள் தான் இதற்கு அடிப்படைக் காரணம்.

இதற்கு முன்னர் அவரது மாமனார் ஜே.ஆர். காலத்திலும் இப்படி அறிவிப்புச் செய்யப்பட்ட ஒரு உள்ளாட்சி சபைத் தேர்தல் அவருக்கு இருந்த அதிகாரத்தை வைத்து தடுத்து நிறுத்தப்பட்ட ஒரு வரலாறும் இருக்கின்றது. ஆனால் இது ஜனாதிபதித் தேர்தல் அதனை அப்படி எல்லாம் செய்ய முடியாது என்று அனைவரும் சொல்லிக் கொண்டிருந்தாலும் நமது அரசியல் யாப்பில் இருக்கும் அதிகாரப்படி ஒரு ஆணைப் பெண்ணாக்கவும் பெண்ணை ஆணைக்கவும் மட்டுமே முடியாது என்று ஒரு வார்த்தை இருக்கின்றது. அதனை வைத்து ஏதாவது விளையாட்டுக்கள் நடக்கலாம் என்பதுதான் நமக்கு இருக்கின்ற அந்த அச்சம்.

2024 நடக்க இருக்கின்ற தேர்தலை ஏதோ ஒருவகையில் நடத்தாமல் பண்ணிவிட்டால் நாட்டில் மீண்டும் ஒரு மக்கள் எழுர்ச்சிக்கு இடமிருக்கின்றது. நாடாளுமன்றத்தில் இருக்கின்ற பெரும்பாலானவர்கள் தேர்தல்கள் நடக்கமால் தமது ஆயுல் பூராவிலும் நாடாளுமன்ற கதிரையில் அமர முடியுமாக இருந்தால் அதனை ஆதரிக்கின்ற மன நிலையில்தான் இருக்கின்றார்கள். காரணம் மீண்டும் ஒரு பொதுத் தேர்தல் நடந்தால் இன்று நாடாளுமன்றில் இருக்கின்ற ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பு கம்மி. அதனால்தான் அவர்கள் அப்படி சிந்திக்கின்றார்கள். இதனை ஜனாதிபதி தனக்கு வாய்ப்பாக பாவிக்க இடமிருக்கின்றது.

தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி ஏதாவது காரியம் பார்த்து விட்டால் நாட்டில் மக்கள் வீதிக்கு இறங்கும்  வாய்ப்பு இருக்கின்றது. தான் கூட அப்படியான ஒரு நிலை வந்தால் வீதியில் இறங்கிப் போராடுவேன் என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்நத தேசப்பிரிய கூட எச்சரித்திருந்தார். துரதிஸ்டவசமாக அப்படி ஒரு நிலை தோன்றினால் அவரைக் கூட ஆட்சியாளர்கள் ஜேவிபி.காரன் என்று முத்திரை குத்தவும் அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. 1983ல் நடந்த இன வன்முறைக்கு ஜேவிபியை குற்றம் சாட்டி தடை செய்த அதே பாணியில் அவர்களைத் 2024 தேர்தல் களத்தில் இருந்தது ஒதுக்கிவிடும் முயற்சிகள் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதுதான் இலங்கை அரசியல்.

இந்த ஜனாதிபதியை இன்னும் பத்து வருடங்களுக்கு தேர்தல்கள் இன்றி அதிகாரத்தில் வைத்திருக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் வஜிர அபேவர்தன பல முறை கேட்டிருந்தார். அதன் பின்னர் அவருக்கு குறைந்தது இன்னும் ஐந்து வருடங்கள் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று அதே கட்சி செயலாளர் ரங்கே பண்டாரவும் கோட்டிருந்தார். அந்தக் கதைகள் ஏதுவும் எடுபடாத நேரத்தில் குறைந்தது மேலும் இரு வருடங்களுக் கொடுங்கள் என்று கெஞ்சிப்பார்த்தார். அதுவும் சரிப்பட்டு வராத போது ஐயோ ஒரு வருடங்களுக்காவது கொடுங்கள் என்று கேட்டார். அந்தக் கோரிக்கைகள் அனைத்தும் கடும் கண்டனத்து இலக்காகியது. இதனைத்தான் முட்டி போட்டுப் பார்க்கின்ற வேலை என்று சொல்வார்கள்.

எல்லாம் முடிந்த பின்னர் இப்போது நீதி மன்றம் தேர்தல் அறிவிப்புப் பற்றிய திகதியை ஜனாதிபதி பதவிக்காலம்  மீள உறுதி செய்யபடும் வரை தடை செய்ய வேண்டும் என்று ரணில் தரப்பில் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார்கள். ஆனால் ரணில் இதுபற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று சொல்வார். இதுதான் அவர் பாணி. அதனை நாம் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டுதான் வருகின்றோம்.  ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு வருடங்களா அல்லது ஐந்து வருடங்களா என்பது தெளிவில்லாது இருப்பதாக வழக்குத் தாக்கல் செய்த தரப்பில் சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்த வழக்குத் தாக்கல் செய்த விடயம் ஜனாதிபதி ரணிலின் முட்டி போட்டுப் பாhக்கும் இனெரு நடவடிக்கைதான் என்று கடும் விமர்சனங்கள் தோன்றி இருக்கின்றது. ஆளும் தரப்பில் இருந்து இப்படியான செயல்களினால் நமக்கு இருக்கின்ற கொஞ்ச நஞ்ச ஆதரவும் இல்லாமல் போய் நாம் மக்களின் வெறுப்பிற்கு ஆளாகி விடுவோம் என்று ரணிலுக்குச் சுட்டடிக்காட்டியதைத் தொடர்ந்து. ஜனாதிபித செயலகம் அந்த வழக்குக்கம் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் தான் என்று ஜனாதிபதி ரணிலும் ஏற்றுக் கொள்வதாக இப்போது அறிக்கை வெளியிட்டிருக்கின்றார்கள்.

வழக்குத் தீர்ப்பு வரும் வரையில் தேர்தல் ஆணைக்குழு எந்த நடவடிக்கைகளையும் ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில் எடுக்கக் கூடாது என்று வழக்கை தாக்கல் செய்திருக்கின்ற இலக்கம் 12ஃ50 காலி றோட் பாணதுறை என்ற முகவரிiயில் வசிக்கின்ற சமிந்த தயான் லெனவ என்ற சட்டத்ரணி அதில்  கேட்டிருக்கின்றார். இது பற்றி அவரிடம் தேர்தல் நெருங்கி வருகின்ற ஒரு நேரத்தில்  ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டால் தான் யாருக்கும் ஆதரவாகவோ எதிராகவே இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை.  இதில் ஒரு தெளிவு வேண்டு என்பதற்காகத்தான் இந்த வழக்கை தான் தாக்கல் செய்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தான் கடைசி நேரத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்து நெருக்கடியை ஏற்படுத்தாது முன் கூட்டி தாக்கல் செய்திருப்பதால் நீதி மன்றம் முன்கூட்டி நாட்டுக்கு ஒரு தெளிவை கொடுக்க ஒரு நல்ல வாய்ப்பும் அவகாசமும் இதனால் கிடைக்கின்றது என்று அவர் வாதிடுகின்றார். இவர் ஒரு சட்டத்ரணி என்பதும் குறிப்பிடதக்கது. ஒரு வேளை இப்படி ஒரு மனிதன் நாட்டில் இருக்கின்றாரா என்பதை உலகிற்குக் காட்டுவதற்கான ஒரு முயற்சியாகவும் இது இருக்கக் கூடும். அப்படியானால் இப்படிப்பட்டவர்கள் வைக்கப்பட வேண்டிய இடம்தான் மனநோய் வைத்தியசலை என்பது நமது கருத்து.

இதற்கு முன்னரும் இந்த பதவிக் காலம் பற்றி பற்றி தெளிவுகளை இருமுறை நீதி மன்றம் தெளிவுபடுத்தி இருக்கின்றது. ஆறு வருடங்களுக்கு பதவிக்குத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரி  புதிய அரசியல் யாப்புத் திருத்தில் எனது பதவிக் காலம் ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டிருக்கின்றது. எனவே எனது பதவிக் காலத்தை தெளிவுபடுத்தி தருமாறு 2018ல் நீதி மன்றத்திடம் தீர்ப்புக் கேட்டிருந்தார்.

அவருக்கு ஐந்து வருடங்களுடன் உங்களை கதை முடிகின்றது. நீங்கள் பதவி துறக்க வேண்டிய காலம் ஐந்து வருடங்கள் என்று நீதி மன்றம் அப்போதும் உறுதியாகச் சொல்லி இருந்தது. ஆனாலும் இன்று லெனோல் தாக்கல் செய்திருக்கின்ற வழக்கு நீதி மன்றத்தில் விசரிக்கப்பட்டு தீர்ப்பு வரும் வரை நாட்டில் பேசு பொருளாக இருக்கும். இதற்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தலை இந்த நேரத்தில் நடத்தக் கூடாது என்று வழக்கத் தாக்கல் செய்த  விஜேசுந்தர என்பவர் இன்று மரணித்து விட்டார். ஆனால் அவரால் குடிகளுக்கு நடந்த அநீயாயத்தால் அந்தத் தேர்தல் இன்று வரை நடக்காமல் போய் விட்டது. அதன் சாபம் இன்மையில் மறுமையிலும் அவருக்கு உரித்தாகும்.

இந்த வழக்கைப் பொறுத்த வரை, அன்று இந்த மைத்திரி வழக்கில் சம்பந்தப்பட்ட ஜயந்த ஜயசூரிய தான் இப்போது சில தினங்களுக்கு முன்னர் நீதியரசராகவும் பதவியேற்று இருக்கின்றார். ஒரு மசோத நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதற்கு சபாநாயகர் கையெழுத்துப் போட்டதும் அது சட்டமாகி விடும். இப்போது எந்தெந்த வழிகளில் தேர்தலுக்கு ஆப்பு வைக்க முடியுமே அத்தனையும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு விட்டன. இதன் பின்னர் ஏதும் தேர்தலுக்கு ஆப்பு இல்லை என்று சொல்ல முடியாது. நாம் கற்பனையில் எதிர்பார்க்காக நேரத்தில் இடத்தில் கூட தேர்தலுக்கு ஏதும் ஆபத்துக்கள் வந்தாலும் வரலாம். அது வன்முறைய உருவத்தில் கூட வரலாம்.

தேர்தல் அறிவிப்புச் செய்யப்பட்ட பின்னர், தேர்தல் தினத்தில் அல்லது முடிவுகள் வெளியிடப்படுகின்ற நேரத்தில் கூட இது நடக்கலாம். வீண் வம்புகளை இழுத்து குழப்பங்களை ஏற்படுத்தவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. கடந்த 2015 தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் கூட இப்படியான ஒரு முயற்சியில் ராஜபக்ஸ இறங்க முயன்றார்கள். அப்போது பொலிஸ் மா அதிபர் ராஜபக்ஸாக்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் நாட்டில் அன்று ஜனநாயகம் பாதுகாக்ப்பட்டது-அமைதி நிலை நாட்டப்பட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

தடை தாண்டி ஒடுகின்ற ஒரு போட்டி போலத்தான் நமது நாட்டில் ஜனநாயகமும் தேர்தல்களும் இருக்கின்றது. மக்களின் செல்வாக்கில்லாதவர்கள் இப்படித் தேர்தலுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்களை விடுத்துக் கொண்டிருந்தாலும் தேர்தலுக்கான ஆயத்தங்களும் நடந்து கொண்டுதான் வருகின்றன. அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று நம்புகின்றவர்கள் மக்களிடம் போய் நமது கொள்கைகள் செயல்பாடுகள் பற்றி பரப்புரை செய்து கொண்டிருக்கின்றார்கள். மக்கள் ஆதரவில்லாதவர்கள் எப்படி இந்தத் தேர்தலைத் தள்ளிப் போட்டு  நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற சுகபோகங்களை தொடர்ந்தும் எப்படிப் பாதுகாத்துக் கொள்வது  என்று அவர்கள் யோசிக்கின்றார்கள். அதற்கான குறுக்கு வழிகள்தான் நாம் மேற்சொன்ன தேர்தலுக்கு எதிரான செயல்பாடுகள்.

இப்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மிகப் பிந்திய செயல்பாடுகள் பற்றி சற்றுப் பார்ப்போம். ஆளும் தரப்பினர் மத்தியில் தமது வேட்பாளர் பற்றிய குழப்பங்கள் தொடர்கின்றன. என்றாலும் அங்கு அதாவது மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை ராஜபக்ஸாக்கள் தான் தீர்மானிப்பார்கள் அவர்கள் விரும்புகின்ற ஒருவரைத்தான் மொட்டுக் கட்சி தமது வேட்பாளர் என்று உறுதி செய்யும். இந்த நிலையில் மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேராவுக்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பது தெரிகின்றது.

ஆனாலும் ஜனாதிபதி ரணில்  ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியே வந்து நம்முடன் இணைந்து கொண்டால் அவரை எமது கட்சி வேட்பாராக நியமிப்பது பற்றி யோசிக்க முடியும் என்று மொட்டுக் கட்சி செயலாளர் சாகர காரியவாசம் அண்மையில் அறிவித்தார். அப்படி நடந்தால் தம்மிக்க பிரதமர் வேட்பாளராக அமர்த்தப்படலாம். அப்போது தேர்தலுக்குத் தேவையான செலவுகளை அவர் மூலம் செய்து கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பு மொட்டுக் கட்சி முகியஸ்தர்களுக்கு இருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் என்பதில் மாற்றங்கள் வராது. அதே போன்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அணுரகுமார திசாநாயக்க என்பதும் உறுதி. இதற்கு மத்தியில் இந்த முறை தமிழ் அரசியல் வட்டாரங்களில் இருந்து ஒரு பொது வேட்பாளர் களத்துக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தவிர இன்னும் பல சிலறைகளும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் களத்துக்கு வரலாம். இந்த ஜனாதிபதித் தேர்தலில் என்றுமில்லாதவாறு வெளி நாட்டுத் தலையீடுகள் காணப்படுகின்றன.

அதனால்தான் நாம் முன்பு  எழுதிய ஒரு கட்டுரையில் பிரதான எதிர்க ;கட்சிகள் மத்தியில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு என்னதான் போட்டிகள் இருந்தாலும் ஜனநாயகத்தை பாதுகாப்பதாக இருந்தால் அவர்கள் ஒரு பரந்துபட்ட கூட்டணியை அமைத்து செயலாற்ற வேண்டும் என்று சொல்லி இருந்தோம். இப்போது ரணிலின் கையாட்கள் தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக எடுத்து வருகின்றார்கள்.

மேலும் நாம்  என்பிபி.க்கு எதிராக ஒரு மெகா கூட்டணி பற்றி சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கட்டுரையில் சொல்லி இருந்தோம்.  இப்போது இந்த மெகா கூட்டணி விவகாரத்தில் இந்தியா மிகுந்த ஆர்வத்துடன் காய் நகர்த்தி வருவதாக நமக்கு செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ரணில் மற்றும் சஜித் இணை வேண்டும் அத்துடன் இந்தக் கூட்டணியில் ராஜபக்ஸாக்களையும் கொண்டு வந்தால் மட்டும்தான் அணுரவுக்கு எதிரான ஒரு பலமான போட்டியைக் கொடுக்கலாம் என்று இந்தியா எதிர்பார்க்கின்றது.

இலங்கை தேர்தலில் இந்தியா ஏன் இந்தளவு ராவை அழுத்தம் கொடுக்கின்றது என்று சிலர் யோசிக்கலாம். என்னதான் அணுரவை இந்தியாவுக்கு அழைத்து நட்புறவுச் சந்திப்புக்களை நடாத்தினாலும் அவர் ஜனாதிபதியாக வருவதை இந்தியா விரும்பவில்லை. அணுர ஜனாதிபதியானால் இந்தியாவுக்கு ஆபத்து. அவர்  சீனாவின் கையாளாகி விடுவார் என்ற அச்சம் அதற்குக் காரணம். அமெரிக்காவும் இதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றது. அவர்களும் இலங்கையில் சீனாவின் கை ஓங்குவதை விரும்ப மாட்டார்கள் என்பது அரசியல் அரிச்சுவடி படிக்கின்றார்கள் கூட அறிந்த விடயம்.

நன்றி: 07.07.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

 புதிய ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன்

Next Story

மலேசிய போட்டியில் உடதலவின்ன ஸொஹா சாதனை