சூடானில் 80 குழந்தைகள் பலி!

-யூசுப் என் யூனுஸ்-

சூடானில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இராணுவத்துக்கும் துணை இராணுவத்துக்குமிடையே நடக்கின்ற சண்டையில் இதுவரை ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி இருக்கின்றார்கள். அங்குள்ள இராணுவத்துக்கு அமெரிக்காவும் துணை இராணுவத்துக்கு ரஸ்யாவும் உதவி வருகின்றன.

இந்த நிலையில் அங்கு 80 வரையான குழந்தைகள் சண்டை மற்றும் பட்டிணியால் பலியாகி இருக்கின்றனர். இன்னும் 300 வரையிலான குழந்தைகள் காப்பகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

உக்ரைனைப் போன்று இன்று இந்த போராட்டம் தொடர்வதற்கு அதன் பின்னால் இருக்கின்ற அமெரிக்காவும்-ரஸ்யாவும்தான் காரணம் என்பது தெளிவு. பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் ரஸ்யா சீனா நட்புறவு நாடுகளாக கடந்த காலங்களில் மாறி இருப்பது அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவாக இருந்து வருகின்றது.

அமெரிக்காவின் இன்று பெரும் பெருளாதார நெருக்கடி நிலவுகின்றது. இலங்கைளைப் போன்று அமெரிக்க பல நாடுகளில் இருந்து கடன் வாங்கி வருகின்றது. அதே போன்று பணத்தை புதிதாக அச்சடித்து நிலமையைச் சமாளித்துக் கொண்டு வருகின்றது. எனவேதான் முன்பு போல இன்று அமெரிக்க உலக பெலிஸ்காரனாக செயல்படுவதில் பெரும் பின்னடைவை எதிர் நோக்கி வருகின்றது.

 நன்றி: 11.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

2023 நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீடு

Next Story

மற்றுமோர் வடகொரியா உதயம்!