சீலைக்கு மேல் சொறியும் ஹக்கீம்!

-நஜீப்-

மஹிந்த தேசப்பிரிய தயாரித்த புதிய உள்ளூராட்சி எல்லைகள் தொடர்பில் சிறுபான்மை சமூகங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது என நாம் சுட்டிக் காட்டிய போது அதனை அவர் முதலில் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், தற்போது இந்தப் பாதிப்பை அவர் ஏற்றுக் கொண்டு, அதனைச் சரி செய்ய சிபார்சுகளை வரும் 26ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கேட்டிருக்கின்றார்.

ஆனால் நாம் அறிந்த வரை சிறுபான்மைத் தலைமைகள் இது விடயத்தில் இன்று வரை ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இது பற்றி தனித்துவத் தலைவர் ஹக்கீமை கேட்டால் நாங்கள் பழைய விகிதாசார முறையைத்தான் மீண்டும் கேட்கின்றோம் என சீலைக்கு மேல் சொறியும் பாணியில் பதில் சொல்கின்றார்.

அவரது இந்தக் கருத்துடன் எல்லை நிர்ணயம் தொடர்பான அவர் கடமைகள் முற்றுப் பொறுகின்றன. சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை சுத்திகரிப்புப் செய்வது என்ற முடிவில் இனவாதிகள் செயலாற்றும் போது ஹக்கீம் பேச்சைக் கேட்டுத்தான் எல்லை நிர்ணயக் குழு முடிவுகளை எடுக்கும் என்று அவர் நிணைக்கின்றார் போலும்.!

தலைவர் உரிமைக் குரல் பாணி இதுதான். ஏனைய தனித்துவத் தலைவர்கள் நிலையும் இதுதான். இதனைத் தொண்டர்கள் புரிந்து கொண்டால் ஓகே.

நன்றி23.04.2023 ஞாயிறு தினக்குரல்

 

 

 

Previous Story

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு! சாணக்கியன் பகிரங்க கருத்து 

Next Story

சாரா ஜெஸ்மின் காதல் காவியம்!