நஜீப்
நன்றி: 07.06.2026 ஞாயிறு தினக்குரல்
இந்த நாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதாக இருந்தால் அதற்கான ஒரேவழி ரணிலின் தலையையும் சஜித்தின் உடம்பையும் பொருத்த வேண்டும்.
இந்த ஆபத்தான சத்திர சிகிச்சைக்கு அவசரமாக தயாராகுமாறு ஐதேக. நவின் திசாநாயக ஆதரவாலர்களிடத்திலும் தொடண்டர்களிடத்திலும் கண்டியில் நடந்த ஒரு வைபவத்தில் கேட்டிருக்கின்றார்.
நமது கணக்குப்படி இது மிக மிக ஆபத்தான ஒரு சத்திர சிகிச்சை.! அரசியல் ரீதியில் இருவருக்கும் உயிராபத்துக் கூட இதில் நிகழலாம். தொடர்ச்சியாக சஜித்தின் மூளை வேஸ்ட என்ற வகையில் பல இடங்களில் கதைகள் வருகின்றன.
இது சஜித்தை அவமானப்படுத்தி பயீனப்படுத்த ரணில் மேற்கொள்கின்ற ஒரு அரசியல் வியூகமாகக் இருக்கலாம் என்று நாம் எச்சரிக்கின்றோம்.
சஜித் கூட்டணியில் இருக்கின்ற தயாசிரியும் சஜித்தை கொச்சைப்படுத்தும் வகையில் சில தினங்களுக்கு முன்னர் பேசி இருந்ததும் தெரிந்ததே. கட்சிக்குள்ளே சிலர் சஜித்துக்கு எதிராக சதி செய்வதாவும் தகவல்.





