சீனாவில் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க வந்தவர்கள் 37 பேருக்கு கோவிட் -19 தொற்று!

BEIJING, CHINA - AUGUST 01: The Emblem of Beijing 2022 Olympic Winter Games is installed at Shijingshan district on August 1, 2021 in Beijing, China. (Photo by VCG/VCG via Getty Images)

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 20-ந்தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பீஜிங்கில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதற்கிடையில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க வந்தவர்களும், போட்டி ஏற்பாட்டாளர்களும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் ஒலிம்பிக்கில் பங்கேற்க வந்த 8 பேருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க வந்தவர்கள், போட்டி ஏற்பாட்டாளர்கள் என இதுவரை மொத்தம் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதையடுத்து பீஜிங் ஒலிம்பிக் கிராமத்தில் கட்டுப்பாடுகளை சீன அரசு மேலும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

Previous Story

சீனாவின் கைக்கூலிகளே அதிகாரத்தில்- அனுரகுமார

Next Story

காங்கோ தாக்குதலில் 60 பேர் பலி