சிவாஜிலிங்கம் பதவி நீக்கம்!

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து எம்.கே.சிவாஜிலிங்கம்  நீக்கப்பட்டது உண்மை என தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சு.நிசாந்தன் தெரிவித்துள்ளார். இவ் விடயத்தை  கட்சியின் தலைவர் சிறிகாந்தாவும் சிவாஜிலிங்கமும் வெளிப்படையாக உளச்சான்றுடன் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (08.08.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே  அவர்  இதனை தெரிவித்துள்ளார்.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரிக்கை

எம்.கே.சிவாஜிலிங்கம் பதவிநீக்கம்! உண்மை என்று கூறும் கட்சியின் அமைப்பாளர் | Tamil National Party General Secretary Sacked

ஜனாதிபதி ரணில் இந்தியா பயணிப்பதற்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர்,13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரி, இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த சமயத்தில் இந்தியாவில் தங்கியிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், அதற்கு முரணான முற்றிலும் நேர்மாறான கோரிக்கையை வலியுறுத்தி மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

அவரது கடிதத்தில் சர்வஜன வாக்கெடுப்பை கோரியிருந்தார்.

இந்நிலையில் கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கத்தை விலகுமாறு கட்சி தலைமையால் கோரப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனை ஏனைய தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்  என தெரிவித்துள்ளார்.

Previous Story

29 மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு வழக்குக்கு தடை !ஏன்?

Next Story

பாராளுமன்றத்தில் ஆண் விபச்சாரி-இராஜாங்க  அமைச்சர் சாமர