சிவப்பு யாப்பு ஓகே!

-நஜீப்-

மக்கள் சக்தி அமைப்பின் முதலாவது மாவட்ட மாநாடு கண்டியில் துவங்கியது. கண்டி-இந்து கலாச்சார மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஆசனங்கள் கிடைக்காததால் பெரும் தொகையானோர் உள்ளே நுழைய முடியாத நிலையை அவதானிக்க முடிந்தது.

ஜேவிபி. தலைவர் அணுரகுமார திசாநாயக்க தனக்கே உரிய பாணியில் உரையை முன்னெடுத்தார்.

விவசாயத்துறையில் நாட்டை எப்படி முன்னோக்கி நகர்த்துவது, தொழில் ரீதியில் எப்படி அபிவிருத்திகளை முன்னெடுப்பது மற்றும் செல்வந்தர்களிடம் உள்ள வளங்களை அவர்களுக்கும் பாதிப்பிலாதவகையில் தேச நலன்களுக்கு எப்படி உபயோகித்துக் கொள்வது என்பன தொடர்பான விளக்கத்தையும், ஊழலற்ற ஆட்சி ஒன்றை இந்த நாட்டில் எப்படி முன்னெடுப்பது என்ற விளக்கங்களையும் வழங்கினார்.

மேலும் இதற்கென தமது ஆட்சியில் புதிய அரசியல் யாப்பொன்று வடிவமைக்கப்படும் என்று அணுர குறிப்பிட்ட போது பலத்த கரகோஷம் அங்கு எழுந்தது.

-நன்றி ஞாயிறு தினக்குரல் 09.01.2022

Previous Story

சீன -இலங்கை பேச்சுவார்த்தை

Next Story

லண்டனில் கொலை 13 வயது சிறுவன் கைது!