சில உள்ளூராட்சி மன்ற தேர்தல்:நாளை வரைநீதிமன்றம் உத்தரவு!

சில உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளையும் நாளை வரை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த வழக்குடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளையும் இடைநிறுத்துமாறே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹீர் மற்றும் கே.பி.பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய குழு முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

ஈரானை சுத்துப்போட்ட அமெரிக்கா..!

Next Story

அமைதிக்கான நோபல் பரிசுக்கு இம்ரான் கான் பெயர் பரிந்துரை!