நஜீப்
நன்றி: 07.06.2026 ஞாயிறு தினக்குரல்
இந்த நாட்டில் 40000 வரையிலான சிறுவர் துஸ்பிரயோகங்கள் பற்றி பதிவுகள் இருக்கின்றன. ஆனால் இதனை விட இரு மடங்குக்கும் அதிகமான பாலியல் துஸ்பிரயோகங்கள் நாட்டில் நடந்திருக்கின்றன. அவை அனேகமாக வீட்டுக்குள்ளே நடந்து வருகின்றன.
அவை பெரும்பாலும் நெருங்கிய உறவுகள் அல்லது தெரிந்தவர்களால் நடப்பவை. அதனால் அவை மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன. இந்த நாட்டில் 35000 முதல் 40000 வரையிலான பௌத்த தேரர்கள் இருக்கின்றார்கள்.
அவர்களினால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவர்கள் எண்ணிக்கை 400கு மேல். இதிலும் கணிசமான எண்ணிக்கை பதிவில் வராதவை. தேரர்கள் மட்டுமல்ல பிற மத குருமாராலும் கூட இந்த சிறுவர் துஸ்பிரயோங்கள் நடந்து வருகின்றன.
பலங்கொடையிலுள்ள ஒரு பெண்கள் ஆராமையிலும் பல சிறுமிகளை அங்கிருந்த பெண் பிக்குனியால் துஸ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதில் விசேட அதிரடிப்படை வீரர் தொடர்பு என்றும் தெரிகின்றது.





