சிங்கம் எலியான கதை!

-நஜீப்-

கடந்த நாடாளுமன்ற அமர்வில் சந்திம வீரக்கொடி உரை அனைவரது கவனத்தையும் ஈத்திருந்தது. எமது போக்குப் பிழையான திசையை நோக்கிச் செல்கின்றது நாம் எம்மை மாற்றிக் கொள்ளவிட்டால் நாட்டில் பெரும் நெருக்கடி நிலை தோன்றி அழிகளுக்கு இடமிருக்கின்றது என்று நான் பலமுறை  ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினேன்.

அது பற்றி எவரும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. பாருங்கள் எப்படியெல்லாம் செல்வாக்குடன் சிங்கம் போல் இருந்த நமது பிரதமர் மஹிந்த இன்று சபைக்குப் பூனைபோல  பதுங்கிப் பதுங்கி வந்து எலிபோல் ஓட வேண்டிய நிலை. இதற்கு நம்மில் இருக்கின்ற சிலர்தான் காரணம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

எனது வீடும் எரிக்கப்பட்டது. நாம் எமது வீடுகள் பற்றியும் நஷ்டஈடுகள் பற்றியும் பேசுகின்றோம். மக்கள் பெரும் நெருக்கடியில் தெருவில் நிற்க்கின்றார்கள். அவர்களுக்கு ஏதாவது சலுகைகள் வழங்குவது பற்றி நாம் இங்கு பேசுகின்றோமா?  நாம் எப்போதுதான் மாறப் போகின்றறோம் என அவர் கேள்வி எழுப்பினார்.

ஞாயிறு தினக்ககுரல் 22.05.22

Previous Story

இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு சீனா உணவுப் பொருட்கள் வழங்கியதற்கு எதிர்ப்பு

Next Story

ஆளும் கட்சிக்கு வாக்களித்தவர்களே அவர்ககளைத் தாக்கினார்கள்! பசில் நாட்டை அழித்துவிடுவார்!!