சாரா ஜெஸ்மின் காதல் காவியம்!

-நஜீப் பின் கபூர்-

(ஈஸ்டர் தாக்குதலுக்கு நான்கு வருடங்கள் நிறைவை முன்னிட்டு எழுதப்படும் கட்டுரை)

அந்த மிருகத்தனமான மனித படுகொலைகள் நடந்து நான்கு வருடங்கள் பூர்தியாகும் (21.04.2019) இந்த நேரத்தில் அதன் சூத்திரதாரிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கின்றார்கள். அல்லது அவர்களைக் கண்டு கொள்ள வேண்டிய தேவை இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நியாயமான விசாரணைக்குக் கூட தடையாக இருக்கும் அளவுக்கு அவர்கள் இன்னும் பலமாகவே இருக்கின்றார்கள் என்று சொன்னால் இதற்கு மாற்றுக் கருத்தக்கள் இருக்க மாட்டாது. இது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச அரங்கிலும் இன்றும் விவாதப் பொருளாக இருக்கின்றது.

தான் இது பற்றி சுயாதீன விசாரணைக்கு ஸ்கொட்லாந் பொலிசாரிடம் விவகாரத்தைக் கையளிக்கப் போவதாக ரணில் ஜனாதிபதியான போது பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் அப்படி ஏதும் இன்றுவரை நடக்கவில்லை. இது எதனைச் சுட்டிக் காட்டுகின்றது.? எனவே அந்த மர்மம் அப்படியே தொடர்ந்தாலும் பொதுவாக நாட்டு மக்களும் பாதிக்கப்பட்ட சமூகத்தினரும் சூத்திரதாரியை இனம் கண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களுக்கு கடவுள் ஒரு வகையில் தண்டணையையும் கொடுத்துத்தான் இருக்கின்றார் என்பது பெரும்பாலான மக்களின் பொதுவான கருத்தாக இருக்கின்றது.

இத் தாக்குதலுடன் தொடர்புடைய சாரா ஜெஸ்மின் என்ற பாத்திரத்தை மட்டும் பேசுவது இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாக நாம் எடுத்துக் கொள்கின்றோம். சாரா விவகாரத்தில் காதல், தலைமறைவு வாழ்க்கை, தியாகம் புனிதப் போர் (அவளைப் பொறுத்து) மர்மங்கள் புரியாத புதிர் என்ற விவகாரங்களை நாம் இங்கு பேச முனைகின்றோம். அதில் முன் பக்கத்தில் சாரா காதல் விவகாரம் பற்றி சற்றுப் பார்ப்போம்.   லைலா மஜ்னு, ஆனர்கலி, மும்தாஜ் சஜஹான் கதைகள் சர்வதேச அளவிலான காவியங்களாக இன்றளவில் இருந்து வருகின்றன.

சாரா ஜெஸ்மின் கதைக்கு வருவதற்கு முன்னர் மகேந்திரன் புலஸ்தினியைப் பற்றித் தெரிந்து கொள்வோம். இவளது பிறப்பகம் களுவாஞ்சிக்குடி. உயர்தரம் விஞ்ஞானத்தில் கல்வி கற்பதற்காக பக்கத்தில் இருந்த கல்முனை நகரில் அமைந்துள்ள ஒரு தனியார் வகுப்பிற்கு இந்த புலஸ்தினி போய் வருவது வழக்கம். அப்படி வந்து போன இடத்தில் அவளுக்கு நிறையவே முஸ்லிம் யுவதிகளுடன் சிநேகம் ஏற்பட்டு அதனுடான இஸ்லாம் மதம் பற்றி ஒரு ஈர்ப்புப் இயல்பாகத் ஏற்பட்டிருக்கின்றது. இஸ்லாம் மதம் பற்றி மேலதிக தேடலில் ஈடுபட்ட புலஸ்தினி விபரங்களைத் தேடிய போது காத்தான்குடியில் உள்ள தௌஹீத் அமைப்பு தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு அவள் அந்த அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்கின்றாள்.

தனது தாய் குடும்ப நிலை காரணமாக அப்போது அபுதாயில்  பணிப் பெண்ணாக வேலை பார்த்து வந்ததால் புலஸ்தினிக்கு இந்தப் பயணங்களில் சுதந்திரமாகப் போய் வர முடிந்தது. உறவுகளுக்குத் தான்  மேலதிக வகுப்புக்களுக்காக போய் வருவதாக சாரா கதை விட்டிருக்கின்றாள்.  தமிழ் கலாச்சாரப் பாரம்பரியங்களுடன் பிறந்து வளர்ந்த புலஸ்தினி அங்கு இஸ்லாம் மதத்தையும் தழுவி இருக்கின்றாள். இந்தப் பின்னணியில் ஒரு நாள் அபுதாபியில் இருக்கின்ற தனது தாயிடம் தான் இஸ்லாம் மதத்தை தழுவி கதையையும் தேசிய தௌஹீத் அமைப்பில் (NTJ) இணைந்து பணிபுரியும் செய்தியை சொன்ன போது தாய் அதிர்ந்து போய் கதறி இருக்கின்றாள். உடனே நீ அதிலிருந்து வெளியேறிவிட வேண்டும் அது எங்களுக்குச் சரிபட்டு வராது என்று கூறியதுடன். நீ உனது முடிவை மாற்றிக் கொள்ள விட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் தாய் மன்றாடி இருக்கின்றாள்-கதறி இருக்கின்றாள். ஆனால் புஸ்தினி எதனையுமே கேட்கவில்லை.

Female suicide bomber used to be a devout Hindu, reveals mother

சஹ்ரானின் தௌஹீத் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட புலஸ்தினி மஹேந்திரன் அடிக்கடி அமைப்புப் பணிகளுக்காக கொழும்பு, தெமடகொட, காத்தான்குடி என நாடுபூராவிலும் போய் வந்திருக்கின்றாள். இதற்கிடையில் அவள் இப்போது புலஸ்தினி மஹேந்திரனுக்குப் பதிலாக சாரா ஜெஸ்மின் எனத் தனது பெயரையும் மாற்றிக் கொண்டாள்.

இதன் பின்னர் அந்த புலஸ்தினியை நாம் சாரா என்று சுருக்கமாக கதையில் கொண்டு செல்லலாம் என்று எதிர்பார்க்கின்றோம். மகளின் இந்த நடவடிக்கைகளினால் நாடு திரும்பிய அவரது தாயார் மனவேதனையில் நோய்வாய்ப்படுகின்றாள். அவளது உடல்நிலை மோசமடையவே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாயை சாரா அனுமதிக்கினாறாள்.  அப்போது சாரா சார்ந்த அமைப்புத்தான் நோயாளியின் நலன்களை கவனித்து வந்திருக்கின்றது. என்றாலும் தனது குழந்தையின் மத மாற்றத்தை அந்த தாயாள் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அது இயல்பானதும் கூட.

குடும்ப நிலமை காரணமாகவும் தான் வந்த நோக்கம் வெற்றி பெறததாலும் விரக்தியில் தாய் மீண்டும் வீட்டுப் பணிப் பெண்ணாக வெளிநாட்டுக்குப் போய் விடுகின்றள். சாரா சுதந்திரமாக தனது இயக்கப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றாள். இப்படிக் கொழும்பு-தெமடகொடவிலுள்ள அமைப்பு செயலகத்துக்குப் போன இடத்தில்  அங்கு ஆறு இள வயதுக்காரர்கள் சாரா ஜெஸ்மினுக்கு அறிமுகமாகின்றார்கள்.

அவர்களில் ஒருவர்தான் ஓட்டமாவடி அஸ்துன் என்ற இளைஞன். இருவரும் ஒரே பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் பயணங்களின் போது துணைக்கு நின்றதால் இந்த அஸ்துனுடன் உறவு-நெருக்கம், பின்னர் காதலாக வளர்ந்திருக்க வேண்டும் என நாம் உகிக்கலாம். எனவே காதலன் பேச்சைக் கேட்டுதான் சாரா தன்னை கடும் போக்கு மதவாத அமைப்பில் இணைந்து கொண்டாள் என்று சிலரது வாதம் பிழையானது என்பது தெளிவாகின்றது.

அதன் பின்னர் இப்போது என்ன நடக்கின்றது என்று பார்ப்போம். தனது அஸ்துனுடனான உறவை சார தாய்க்குத் தெரிப்படுத்திய போது அவளுக்கு இனி தனக்கு இழப்பதற்கு எதுவுமே கிடையாது என்ற நிலை. வெள்ளம் தலைக்கு மேல் போன பின்னர் என்னதான் பண்ண முடியும்.?  தனது இந்த காதல் பற்றி அஸ்துன் தனது பெற்றோரிடமும் கூறி சம்மதம் கேட்க அவர்களும் நெருப்பாகக் கொதித்ருக்கின்றார்கள்.

அஸ்துனை வீட்டிலிருந்து விரட்டியடிப்பதாகவும் எச்சரித்திருக்கின்றார்கள். இதனால் வேறு வழியின்றி இருவரும் திருமணம் செய்வது என்று தீர்மானித்திருக்கின்றார்கள். 2015ல் சாரா- அஸ்துன் திருமனம் நடக்கின்றது. மிக ஏளிமையான இந்த இணைவைக் கூட அந்த அமைப்புத்தான் அன்று செய்து வைத்திருக்கின்றது.

sara ja 1

தாய் வெளிநாடு போனாலும் மகளுடன் தொடர்ப்பில்தான் இருந்து வந்திருக்கின்றாள். எங்கள் குடும்பமும் உங்கள் முடிவை ஒத்துக் கொள்ளாது உனது கணவருடைய குடும்பமும் அதனை ஏற்றுக் கொள்ளாது அங்கு நீங்கள் தனித்து விடப்பட்டிருக்கின்றீர்கள். நீ என்னதான் எனக்குத் துரோகம் பண்ணினாலும் இதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இருவரும் வெளிநாட்டுக்கு வந்து விடுங்கள் என்று தாயார் விடுத்த வேண்டுகோளை கணவன் அஸ்துனிடம் சாரா கூற தாயாரின் கோரிக்கைக்கு இருவரும் இணங்கிக் கடவுச்சீட்டை எடுத்து தாயாருக்கு அனுப்பி இருக்கின்றார்கள்.

அப்படி அனுப்பிய சில நாட்களுக்குள் சாராவுக்கு மட்டும் விசாவைத் தாய் அனுப்பி வைக்க, அதனை சாரா ஏற்றுக் கொள்ளவில்லை. கணவனுடன்தான் வந்தால் வருவேன் என்று அடம்பிடிக்க இல்லை, அவரை பின்னர் எடுக்கலாம் நீ முதலில் வா அப்போது இருவரும் அவருடைய விசா விடயத்தை பார்க்க முடியும் என்று கூற சாரா விமானமேறி தாயிடம் போய் இருக்கின்றாள்.

இது விடயத்தில் சாராவின் தாயாரும் சற்றுக் கபடத்தனமாக காய் நகர்த்தி தனது பிள்ளையை அஸ்துன் பிடியிலிருந்தும் மதமாற்றத்தில் இருந்தும் விடுவித்துக் கொள்ள எண்ணி இருக்கக் கூடும். நெடு நாளாகியும் தனது கணவன் விவகாரத்தில் தயார் அசமந்த போக்கில் இருப்பது சராவுக்குத் தெரியவர, அஸ்துனை என்னால் மறக்க முடியாது அஸ்துன் இல்லாமல் தன்னால் இங்கு இருக்க முடியாது. கணவனை இங்கு எடுத்துத்தர முடியாவிட்டால் நான் இலங்கைக்குப் போய் விடுவேன் என்று அவள் தாயை தினம்  நச்சரித்துக் கொண்டு வந்திருக்கின்றாள்.

மகளின் இந்த நச்சரிப்புத் தாங்க முடியாத  தாய் அவளை மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கின்றாள். அப்போதும் தாய் தனது பாசப் பிடியிலிருந்த மகளை விலக்கி வைக்க விரும்பவில்லை. தனது மகள் நாட்டுக்கு வருகின்றாள் அஸ்துன் பிடியில் அவள் அகப்படாமல் நீங்கள் அவளை களவாஞ்சிக்குடிக்கு அழைத்துக் கொண்டு போய் விடுங்கள் என்று தனது சகோதரன் ஒரு வரிடத்தில் கண்டிப்பாக கேட்டிருக்கின்றாள்.

அப்படி சாரா கட்டுநாயக்க வந்திறங்கிய நேரம் சாரா மாமனார் ஒருவர் அங்கு போய் இருக்கின்றார். அதே நேரம் சாரா ஜெஸ்மின் தனது கணவனிடம் தான் வருகின்ற தகவலை தாய்க்குத் தெரியாமல் சொல்லி அஸ்துனையும் விமான நிலையத்துக்கு அழைத்திருக்கின்றாள். அஸ்துனும் குறிப்பிட்ட நேரத்துக்கு  அங்கு போய் நின்றிருக்கின்றான். அஸ்துனை சாரா மாமனார் அறிந்திருக்காததால் அந்த இருவரும் விமான நிலையத்தில் சாராவுக்காகப் போய் நின்றிருக்கின்றார்கள்.

தனது மாமனார் பிடியிலிருந்து தப்பி கணவனுடன் தலைமறைவாவதுதான் சாராவின் நோக்கமாக இருந்தது. ஆனால் தனது சகோதரி கொடுத்த ஆலோசனைக்கு அமைய சாரா மாமனார் விளிப்பாக நடந்து கொண்டதால் அந்த இடத்தில் அஸ்துன் தோற்றுப் போக வேண்டி வந்தது. சாராவை எடுத்துக் கொண்டு மாமனாரும் களுவாஞ்சிக்குடி போக அதே பஸ்சில் அஸ்துனும் பயணித்திருக்கின்றான். இந்த நிகழ்வுகளின் போது இருவரின் உணர்வுகளை இன மாதவாத்துக்கு அப்பால் மனிதம் என்ற வகையில் ஒரு முறை எண்ணிப் பார்க்க வேண்டும் என்பது கட்டுரையாளனின் தனிப்பட்ட வேண்டுகோளாக இருக்கின்றது.

இப்படி ஊருக்கு வந்த சாரா சில தினங்கள் களுவாஞ்சிக்குடியில் தாங்கிவிட்டு வாய்ப்புக் கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலே தனது கணவனுடன் களுவாஞ்சிக்குடி பொலிசில் நிலையத்துக்குப் போய் தமது கதையைக் கூறி சட்டரீதியான திருமணச் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க அந்த முறைப்பாட்டை பதிவு செய்து கொண்ட பொலிஸ் அவர்களை சேர்ந்து வாழ மீண்டும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றார்கள். அப்படிப் போனவர்களுக்கு சஹ்ரானின் தேசிய தௌஹீத் அமைப்பு காத்தான்குடி தண்ணீர் தாங்கி வீதியில் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்துக் கொடுத்திருக்கின்றார்கள். அந்த நாட்களில் பிழைப்புக்காக சாரா ஜெஸ்மின் மின் உபகரணங்களை விற்பனை செய்கின்ற ஒரு கடையில் காசாளராகவும் வேலை பார்த்து வந்திருக்கின்றாள்.

இப்படி 2017 நோன்பு வரை அங்கு வாழ்ந்த சாரா-அஸ்துன் சோடிகள் தமக்கு இங்கு வாழ்வது ஆரோக்கியம் கிடையாது முரன்படுகின்ற தமது உறவுகளை அடிக்கடி இங்கிருந்தால் சந்திக்க வேண்டி வருகின்றது. அதனைத் தவிர்ப்பதற்காக தமது இருப்பிடத்தை மாற்றிக் கொள்கின்றார்கள். இப்போதுதான் சாராவுக்கு சஸ்ரான் மனைவி பாதிமா ஹாதியா உறவு கிடைக்கின்றது. சஹ்ரான் ஏற்பாட்டில் அவரது மனைவியின் வீட்டிற்கு சாரா-அஸ்துன் அனுப்பி வைக்கப்பட அவர்களுக்கு ஒரு சிறிய வீட்டை ஹாதியா ஏற்பாடு செய்து கொடுக்கின்றாள். அந்த வீட்டு முகவரி. 382/3 கொகுனுகொல்ல கடுபொத்த-நாரம்மல என்பது. அந்த வீட்டில் இருக்கின்ற போது சாராவும் சஹ்ரான் மனைவி  ஹாதியாவுக்கும் நெருக்கமான உறவும் பழக்கமும் ஏற்படுகின்றது.

 

அங்கு சில காலம் வாழ்ந்தவர்கள் தமது கணவன் இயக்கப் பணிகளுக்காக கொழும்பு காத்ததான்குடி என்று நாடு முழுவதும் ஓடித்திரியா சாராவுக்கு துனையாகவும் பாதுகாப்பாகவும் ஹாதியாவும் அவளது குடும்பமும்  இருந்திருக்கின்றார்கள். அதற்குப் பின்னர் அவர்கள் தமது இருப்பிடத்தை மாற்றி அதே பிரதேசத்தில் குருனாகல-மடலெஸ்ஸ என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டுக்குப் போய் குடியேறுகின்றார்கள்.

இதுதான் இந்த ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளில் ஒருவராகக் கருதப்படும் நௌபர் மௌலவி வீடு. அப்போதும் சாரா-ஹாதியா உறவு நெருக்கமாக இருந்து வந்திருக்கின்றது. ஏதாவது தேவைகளுக்காக வெளியே போவதாக இருந்தால் கண்டிப்பாக புர்க்கா அணிந்து முகத்தை மூடிக் கொண்டுதான் வெளியே போக வேண்டும் என்று சஹ்ரானும் அஸ்துனும் தமது மனைவிமாருக்குக் கண்டிப்பாக உத்தவிட்டிருக்கின்றார்கள் அவர்களும் அதனைப் பேணி வந்திருக்கின்றார்கள்.

சஹ்ரான் மனைவி ஹாதியாவை விட அஸ்துன் மனைவி சாரா ஜெஸ்மின் அறிவு மட்டம் பறத்துபட்டதாகவும் ஒரு கொள்ளை அடிப்படையிலும் உயர் மட்டத்தில் இருந்து வந்திருக்கின்றது. சாரா உயர்தரம் விஞ்ஞானாம் கற்றவர். ஹாதியா வெரும் ஆறுவரைதான். பேரினத்தவர்களினால் தமது சமூகத்துக்குக் கொடுக்கப்படுகின்ற இம்சைகள் ஞானசாரர் தெந்தரவுகளை எல்லாம் சாரா ஹாதியாவுக்கு தாக்கரீதியாக தெளிவுபடுத்தி வந்திருக்கின்றாள். இதற்கொள்ளாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றும் அவள் வாதிட்டிருக்கின்றாள். இந்தக் கதைகளைக் கோட்ட ஹாதியா மிகவும் ஏலனமாகத்தான் சாரா கதையை எடுத்துக் கொண்டு  இது எப்படிச் சாத்தியம் என்று அவளது அறிவு மட்டத்தில் வாதித்திட்டு வந்திருக்கின்றாள். அப்போதெல்லாம் பொறுத்திருந்தது பார் நடப்பதை என்று அதற்கு சாரா உறுதிபட பதில் கொடுத்திருக்கின்றாள்.

இவர்கள் தங்கி இருந்த வீட்டை நௌபர் மௌலவி திருப்பிக் கேட்ட போது. அப்துல் காதர் ஹாசீம் என்ற ஹாதிய சகேதரர் இன்னுமொரு வீட்டை அவர்கள் தங்கத் தயார் பண்ணிக் கொடுத்திருக்கின்றார். அப்போது பெரோசா என்ற ஒரு யுவதியும் சாராவுடன் அந்த வீட்டில் இணைந்து கொண்டிருக்கின்றாள். அப்போதுதான் இப்படி ஒரு நிகழ்வு நடக்கின்றது. 2019 பெப்ராவாரி  20ம் நாள் எட்டுப் பேரடங்கி ஒரு குழு சஹ்ரான மனைவி ஹாதியா வீட்டிற்கு வந்து சஹ்ரான் போட்டோவைக் காட்டி இது உங்களுடைய கணவனா என்று கேட்க அதற்கு ஹாதிய ஆம் என்று பதிலளிக்கின்றாள். இப்போது அவர் எங்கே என்று கேட்க நெடுநாள் அவர் எங்களுடன் தொடர்பில் இல்லை என்று பதில் கொடுக்கின்றாள் ஹாதியா. இப்படி அங்கு வந்த எட்டுப்பேரில் ஒருவர்  அன்சார் என்பவர். அவரும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர். அவர் ஏற்கெனவே பொலிஸ் பிடியில் சிக்கி இருக்கின்றார்.

அன்சாரைக் கூட்டிக் கொண்டு வந்த குழு மாவனெல்ல பொலிசுக்குப் போய் இருக்கின்றது. அன்சார் என்பவர் ஒரு வாகன வியாபாரி. அவரை பொலிஸ் கைது செய்து உடன் விடுவித்து அடுத்தநாள் பொலிசுக்கு வருமாறு கூறி இருக்கின்றது. அங்கு 2019.02.21.திகதி போன போது சாரா மற்றும் பெரோசா பற்றி பொலிசார் அன்சாரிடத்தில் கேள்வி எழுப்பி இருக்கின்றார்கள்.  அன்சார் அன்று வழங்கிய தகவல்களின் படி பொலிசார் உடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த மனிதப் படுகொலைகள் தடுக்கப்பட்டிருக்க அதிக வாய்புக்கள் இருந்திருக்கும்.

சாரா மற்றும் பெரோசா பற்றி பொலிஸ் விசாரித்த செய்தி சாராவுக்குத் தெரியவரா அவள் உடனடியாகத் தனது கணவனுககு இந்த தகவல்களைச் சொல்லி ஆலோசனை கேட்டிருக்கின்றாள். அதற்கு  அஸ்துன் முடியுமான மட்டும் விரைவாக அங்கிருந்து வெளியேறி விடுங்கள் என்று பதில் வழங்கி இருக்கின்றார். வரும் போது பொரோசா மற்றும் சஹ்ரான் மனைவி ஹாதிய அவரது பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு குருனாகலை நகருக்கு உடனே வாருங்கள் என்று சொல்லி இருக்கின்றார்.

இவர்கள் அவசரமாக பயணிப்பதைப் பார்த்த அயலவர்கள் அவசரமாக எங்கே போகப் போகின்றீர்கள் என வினாவி இருக்கின்றார்கள். அப்போது சாரா ஜெஸ்மின் திருமனமாகி பல வருடங்கள் கழிந்திருந்தாலும் அவளுக்குப் பிள்ளைப் பேறு இல்லாதிருந்திருக்கின்றது. அதற்காக குருனாகலையில் இருக்கும் மகப்பேற்று வைத்தியர் தர்சன சில்வாவைப் பார்க்கப் போவதாக கதை சொல்லி இருக்கின்றார்கள். தற்செயலாக இது டாக்டர் சாபியாக மட்டும் இருந்திருந்தால் அவர் களுத்தில் முடிச்சி நன்றாக இறுகி இருக்கும்.

sara ja 1

இவர்களை ஏற்றிக் கொண்டு துவான் என்பருடைய திரிவில் குருனாகலை நகருக்கு வந்திருக்கின்றது. இதற்கு 1300 காசையும் அவர்கள் கொடுத்திருக்கின்றார்கள். நகரில் இறங்கியவர்கள் தமக்குக் கிடைத்த மற்றுமொரு ஆலோசனைப்படி வேறு ஒரு திரிவிலில் எறிப் பயணித்திருக்கின்றார்கள். மீண்டும் வந்த ஒரு தொiபேசி அழைப்பை அடுத்து அவர்கள் அதிலிருந்து இறங்கி பாதையில் நின்றிருக்கின்றார்கள். அந்த இடத்தக்கு நகரில் இருந்து பயணித்ததற்காக கட்டணம் 70 ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

அப்போது அவர்கள் இறங்கிய இடத்திற்கு ஒரு சிவப்பபு நிற வாகனம் வந்து நின்றிருக்கின்றது. அதில் சாராவின் கணவன் அஸ்துன் இன்னும் சிலரும் அதில் வந்திருக்கின்றார். திரிவில் வண்டியில் வந்த அனைவரும் அந்த சிவப்பு வாகனத்தில் ஏற பெரோசாவை சிவப்பு வண்டியில் வந்த அசாட் என்பவர் காத்தான்குடிக்குக் கூட்டிக் கொண்டு போவதற்காக அதிலிருந்து இறங்கி இருக்கின்றார். அவர்களை ஏற்றிக் கொண்டு போன சிவப்பு வண்டி நீர் கொழும்பு வரை பயணத்திருக்கின்றது.

The scene after the Sainthamaruthu suicides in 2019.

அதன் பின்னர் இரு மாதங்கள் கடந்து 2019.04.21ல் மனித வேட்டைக்காரர்கள் தமது அட்டகாசத்தை புரிந்திருக்கின்றார்கள். அதனைத் தடுத்திருக்க சிறப்பான வாய்ப்பிருந்தும் அப்படி நடக்கவில்லை அது ஏன் என்பதுதான் இன்றுவரையுள்ள கேள்வி

Previous Story

சீலைக்கு மேல் சொறியும் ஹக்கீம்!

Next Story

கண்ணீர் கதை!