சாமானிய பெண்ணை மணக்கிறார் புருணே இளவரசர் !

புருணே நாட்டின் இளவரசர் அப்துல் மதீன், அரச குடும்பத்தை சேராத ஒரு சாதாரண பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். 1984ஆம் ஆண்டு முதல் புருணேவில் அரசர் குடும்ப ஆட்சி முறை நடந்து வருகிறது. அங்கு எண்ணெய் வளம் மிக அதிகம். இதன் மக்கள் தொகை 4.50 லட்சமாகும்.

உலகிலேயே பணக்கார நாடுகளில் முன்னிலையில் உள்ள நாடான புருணேயின் மன்னர் சுல்தான் ஹஸ்ஸனல் பொல்கியா. இந்த சுல்தானின் 10ஆவது மகன் இளவரசர் அப்துல் மதீன் (32). இவர் தனது காதலியான யாங் முலியா அனிஷா ரோஸ்னா என்பவரை திருமணம் செய்து கொள்ள போகிறார்.

Know abou the most expensive mansion: Istana nurul iman palace - Times Property

அரசு குடும்பத்தை சேராதவர் அனிஷா. இவருக்கு வயது 29ஆகும். இந்த பெண் மதீனின் தந்தையின், அதாவது மன்னரின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரின் பேத்தியாவார். இளவரசர் மதீன், அந்த நாட்டு ராணுவத்தில் ஹெலிகாப்டரில் விமானியாக பணிபுரிந்து வருகிறார்.

அது போல் அனிஷா பேஷன் துறையில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அந்த நாட்டின் தங்க குவிமாடம் கொண்ட மசூதியில்தான் இவர்களுடைய திருமணம் நடைபெறுகிறது. இதற்காக திருமண நிகழ்ச்சிகள் 1,788 அறைகள் கொண்ட அரண்மனையில் பிரம்மாண்ட விழாவுடன் தொடங்குகிறது.

Istana Nurul Iman Palace: World's Largest House

இஸ்லாமிய முறைபடி நடக்கும் இந்த திருமண விழாவில் உலக தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்பர் என தெரிகிறது. அண்மைக்காலமாக இளவரசர் மதீன் தனது தந்தையுடன் சர்வதேச ரீதியில் முக்கிய பங்களிப்பை செய்து வருகிறார்.

அவரது தந்தையுடன் இணைந்து சார்லஸ் அரசர் மற்றும் கமீலா பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். அது போல் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கிலும் அவர் கலந்து கொண்டார். உலகிலேயே மிகப் பெரிய வீடு என்ற பெருமையை பெற்றுள்ளது புருணே நாட்டின் சுல்தானின் வீடு.

அந்த மாளிகையின் பெயர் இஸ்தானா நூருல் இமான் ஆகும். புருனே நாட்டு சுல்தான் ஹசனல் போல்கியா அந்நாட்டின் 29ஆவது பிரதமராகவும் இருந்து வருகிறார். இவர் முடிசூட்டிய பிறகு பல ஆண்டுகளாக இந்த மாளிகையில் இருந்து வருகிறார்.

Brunei's polo-playing prince to marry commoner

இந்தியாவில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனையை விட இது புருனே சுல்தான் அரண்மனை பெரியது. குஜராத்தில் இருக்கும் இந்த அரண்மனை 8 லட்சம் சதுர அடிதான். ஆனால் புருனே சுல்தானின் மாளிகை 22 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனை புத்தகத்திலும் தன் பெயரை பதித்துள்ளது இஸ்தானா மாளிகை. இந்த மாளிகையின் பெரும்பகுதி தங்கத்தால் ஆனது. இங்கு 7 ஆயிரம் ஆடம்பர வாகனங்கள் உள்ளனர். இந்த மாளிகையின் மதிப்பு மட்டுமே ரூ 11,600 கோடி ஆகும்.

Fotos: lujo oriental en la boda del príncipe de Brunei, con diez días de celebraciones | Perfil

சுல்தானின் சொத்து மதிப்பு ரூ 2.49 லட்சம் கோடி ஆகும். அதில் கார்கள் மட்டும் 5 பில்லியன் டாலர் மதிப்பு என சொல்கிறார்கள். இந்த மாளிகையில் 257 பாத்ரூம்கள் உள்ளன. அறைகளின் எண்ணிக்கை 1,788 ஆகும். 5000 விருந்தாளிகள் தங்கும் அளவுக்கு ஹால் இருக்கிறது.

Brunei's Prince Abdul Mateen Asia's Most Handsome Royal. SEE His Girlfriend - YouTube

110 கார்கள் நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங் வசதி, 5 நீச்சல் குளங்கள், ஹெலிபேட், 1500 பேர் அமர்ந்து தொழுகை நடத்தும் அளவுக்கு மசூதி உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த வீடு 1984 இல் கட்டப்பட்டது. இந்த மாளிகையை லியோனார்டோ லாக்சின் வடிவமைத்தார்.

துபாய் புர்ஜ் கலிபாவை கட்டிய குவான் சியூதான் இந்த மாளிகைக்கு உள் அலங்காரம் செய்துள்ளார். தங்கம், மார்பிள் கொண்டு இந்த மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. சிறிய நாடான இந்தோனேசியாவின் புருனேவில்தான் இந்த இஸ்தானா நூருல் இமான் மாளிகை அமைந்துள்ளது.

Previous Story

 இலங்கையில் காய்கறிகள் விலை 7 மடங்கு உயர்வு 

Next Story

வாராந்த அரசியல் (14.01.2024)