சாதுவான ரணில் சிங்கமானதேன்!

-நஜீப்-

தன்னை தலைசிறந்த ஜனநாயகவாதியாகவும் மேற்கத்திய நண்பனாகவும் காட்டிக் கொண்டிருந்த நமது ஜனாதிபதி ரணில். அதிகாரத்துக்கு வரும் முன்னரும் வந்த நாளிலும் தான் ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை நடத்தப் போவதாகவும், இன்டர்போலின் உதவியை நாடப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதே போன்று தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தருவதாகவும் சொன்னார். சனல் 4 விவகாரத்திலும் அப்படித்தான் மனிதன் பேசினார். அவர்தானா இன்று இப்படிப் பேசுகின்றார் என்று மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு அவர் அந்தர் பல்டி அடித்திருக்கின்றார்.

President Ranil Wickremesinghe Discusses Key Issues in Interview with  Deutsche Welle - PMD | PMD

தனது மேற்கத்திய நண்பர்களை எதிரிகள் என்ற அளவுக்கு விமர்சித்திருக்கின்றார். எந்த விவகாரத்திலும் சர்வதேச விசாரணைக்கு ஒத்துக் கொள்ளப் போவதில்லை. என்ன நீங்கள் எங்களை அடிமைகள் என்று நினைத்துக் கொண்டா அடக்கியாளப் பார்க்கின்றீர்கள் என்று ஊடகவியலாளர் முகத்தில் சிங்கமாகப் சீறிப் பாய்ந்திருக்கின்றார்.

உனக்கு என்ன தெரியும்? என்னைக் கேட்க நீயார்? வாயை மூடு என்ற வார்த்தைகள் எல்லாம் அங்கு உச்சரிக்கப் பட்டிருக்கின்றது. அவர் கருத்தை மஹிதாவும் அங்கிகரிக்கின்றார். சாதுவான ரணில் சிங்கமாக பாய்வது தொடர்பில் நமக்கு இப்படி ஒரு விமர்சனம் இருக்கின்றது.

வருகின்ற தேர்தலில் சிங்கள வாக்குகளைப் பெற்றுக் கொள்ள இப்படியெல்லாம் அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டி இருக்கின்றது அவ்வளவுதான்.

 நன்றி: 08.10.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

800 விமர்சனம்: முரளிதரன் படம் வெற்றி பெற்றதா?

Next Story

அமைதி நோபல்: ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகம்மதிக்கு!