சாட்சியும் குற்றவாளியும் அவுட்!

நஜீப்

நன்றி: 17.05.2026 ஞாயிறு தினக்குரல்

பிரான்ஸ் ஏயர்பஸ் மோசடியில் பிரதான சாட்சியும் குற்றவாளியுமான கபில சந்திரசேன தற்கொலை செய்து கொண்டது அரசியல் வட்டாரங்களிலும் நீதித்துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இவர் பிரபல கிரிக்கட் வீரர் அரவிந்தடி சில்வா சகா. எப்படி சகா என்றால் அவரும் கபிலவும் திருமணம் செய்திருப்பது இரட்டை சகோதரிகளை. கபில மனைவி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார். அதனால் கபில பினையில் இருந்து வெளியே வந்து தனியாக தனது வீட்டில் இருந்தார்.

உறவு முறை காரணமாகஅரவிந்த அவரைத் தனது வீட்டிற்கு அழைத்துத் தங்க வைத்திருக்கின்றார். இந்த நிலையில் கபில பினையில் வெளியே வந்த முறை தொடர்பில் அவருக்குப் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

போலி ஆவணங்களையும் ஆட்களையும் சமர்ப்பித்து பினையில் வந்தவரை வழக்கு முடியும் வரை உள்ள வைதிருக்க நீதி மன்றத்துக்கு அதிகாரம் இருக்கின்றது.இதற்கு கபில் அஞ்சினாரோ என்னவோ.!

Previous Story

சீனாவில் டிரம்புக்கு பாதுகாப்பு கொடுக்க மறுப்பு!