-நஜீப்-
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட மனித வேட்டைக்காரன் சஹ்ரான் மனைவி அப்துல் காதர் பாதிமா ஹதியாவுக்கு கல்முனை நீதி மன்றம் சில தினங்களுக்கு முன்னர் பிணையில் வெளியில் விடப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் அவருக்கு நேரடியாக எந்தத் தொடர்புகளும் இல்லாவிட்டாலும் தாக்குதல் தொடர்பான புலஸ்தினி அல்லது சாரா பற்றிய தகவல்களை பொலிசாருக்கு வழங்காத ஒரு குற்றச்சாட்டு மட்டும்தான் அவருக்கு இருக்கின்றது. இந்தத் தாக்குதலில் 260 பேர்வரை படுகொலை செய்யப்பட்டு பல நூறு பேர் இன்னும் ஊணமுற்று-காயப்பட்டு இருக்கின்றார்கள்.
அவர்கள் நலன்களை பாதுகாப்பதில் அரசாங்கம் எந்த உருப்படியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் இப்போது இருக்கின்றது. இந்த வழக்கின் போக்கு திட்டமிட்டுத் திசை திருப்பப்பட இருப்பதாகவும் தெரிகின்றது. சூத்திரதாரி இன்னும் மர்மமாக இருக்கின்றார்.
இதற்கிடையில் தாக்குதல் நடைபெற்ற நான்கு வருட நிறைவை முன்னிட்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை முன்னிட்டு நிதி திரட்டும் பொறுட்டு வரும் 18,19ம் திகதிகளில் கொழும்பு டவர் ஹோலில் ‘2019ல் ஒரு நாள்’ என்ற மேடை நாடகம் திரையிடப்பட இருக்கின்றது.
நன்றி: 19.03.2023 ஞாயிறு தினக்குரல்