சவூதி போட்ட அந்தர் பல்டி!

-யூசுப் என் யூனுஸ்-

இன்று உலக அரங்கில் பல நடக்க முடியாத காரியங்களை சாதித்துக் காட்டுவதில் சீனா பெரும் முன்னேற்றங்களைக் கண்டு வருகின்றது. இராஜதந்திர ரீதியிலான இந்தக் காய் நகர்த்தல்களை இப்போது சீனா கச்சிதமாக முடித்து வருகின்றது.

அண்மையில் ஈரானுக்கும் சவுதிக்கும் இடையில் சமாதனம் செய்வதில் சீனா சாதிதுக் காட்டி இருக்கின்றது. மத்திய கிழக்கில் அரசியல் இராணுவ வல்லதிக்கம் தொடர்பில் ஈரானுக்கும் சவூதிக்கும் நெடுநாளாக இருந்து வந்த பகைமையைக் களைந்து அவர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தி இன்று இரு நாடுகளுகிடையிலான இராஜதந்திர உறவுகள் கூட கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்படுத்தி விட்டிருக்கின்றது சீனா.

As longterm partnership with US fades, Saudi Arabia seeks to diversify its diplomacy – and recent deals with China, Iran and Russia fit this strategy

இதனால் டெஹ்ரானிலும் ரியாத்திலும் பரஸ்பரம் தூதரங்கள் சில தினங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டு விட்டன. வேடிக்கை என்னவென்றால் ஈரான் தன்னிடத்தில் இருக்கின்ற இராணுவ தொழிநுட்பங்களை குறிப்பாக அணுத் தொடர்பான செயல்பாடுகளை சவுதியுடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு இன்று ஈரான்-சவுதி உறவு சில தினங்களுக்குள் வளர்ந்து விட்டது.

Awkward relations

அமெரிக்காவின் கையாளாக இதுவரை இயங்கி வந்த சவுதி அடித்த பல்டி அமெரிக்காவுக்கு சர்வதேச அரங்கில் கிடைத்த மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது. இப்போது தனக்கு ரஸ்யாவும் வேண்டும் சீனாவும் வேண்டும் அமெரிக்காவும் வேண்டும், என்று நிற்கின்றது சவுதி.

நன்றி: 11.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சாதி பாகுபாட்டிற்கு எதிராக மசோதா USA: செனட் உறுப்பினருக்கு கொலை மிரட்டல்

Next Story

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கிறாரா..! மிலிந்த மொரகொடவின் பதில்