சவுதியின் சர்வதேச ஒட்டகத் திருவிழா

Saudi men lead camels during a beauty contest as part of the annual King Abdulaziz Camel Festival in Rumah, Saudi Arabia, on Friday. A dozen camels were banned from the competition for receiving Botox injections.

அழகு அறுவை சிகிச்சை செய்த ஒட்டகங்களுக்கு சவுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒட்டக அழகுப் போட்டியில் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் சவுதியின் ரியாத் நகரில் சர்வதேச ஒட்டகத் திருவிழா நடைபெறும்.

மன்னர் அப்துல்லாஹ் பெயரில் நடைபெறும் இந்த ஒட்டகப் போட்டியில் வெற்றி பெறும் ஒட்டக உரிமையாளருக்கு 66 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும். இதற்காக மத்திய தரைக்கடல் நாடுகள் பலவற்றில் இருந்து ரியாத் நகருக்கு ஒட்டக உரிமையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். இந்த கண்காட்சி மூலமாக சவுதி அரேபிய அரசுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.

நாய்கள் கண்காட்சியில் சிறப்பாக காட்சியளிக்கும் நாய்களுக்கு எவ்வாறு பரிசு வழங்கப்படுகிறதோ அதேபோல இந்த ஒட்டக கண்காட்சியில் சிறந்த தீவனம் கொடுத்து வாளிப்பாக வளர்க்கப்பட்டுள்ள ஒட்டகங்களுக்கு பரிசளிக்கப்படும். இந்த ஒட்டகங்கள் மீது அவ்வப்போது ஊடக வெளிச்சம் படுவதால் இவை பிரபலமாகும்.ஆனால் இந்த போட்டியில் பங்கேற்க சில விதிமுறைகள் உண்டு.

அங்கீகரிக்கப்பட்ட ஒட்டக இனங்களில் இருந்து மட்டுமே ஒட்டகங்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்படும். ஒட்டகங்களின் தோல் மிருதுவாக காட்சியளிக்கவும் முகம் பொலிவாக இருக்கவும் ஒட்டக உரிமையாளர்கள் பலர் தடைசெய்யப்பட்ட போட்டாஸ் ஊசிகளை ஒட்டகங்களுக்கு செலுத்துகின்றனர். தேவைப்பட்டால் ஒட்டகங்களின் அழகை கூட்ட(!) சட்டவிரோத அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது.

இதுபோல அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒட்டகங்கள் போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே போட்டி துவங்கும் முன்னர் ஒட்டகங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் கொண்டு எக்ஸ் ரே சோதனை மேற்கொள்ளப்படும். கடந்த 2018ம் ஆண்டு அழகு அறுவை சிகிச்சை செய்த 12 ஒட்டகங்கள் போட்டியில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டன.

தற்போது 2021ம் ஆண்டு 40 ஒட்டகங்களுக்கு இதே காரணத்துக்காக போட்டியில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இந்த பரிசு தொகையை வெல்வதற்காக ஒட்டக உரிமையாளர்கள் பலர் இவ்வாறு மிருகவதை செய்ததாக தற்போது சவுதி அரேபியாவில் மனித உரிமை ஆர்வலர்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு சவுதி அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இது வைரல் ஆகியுள்ளது.

Previous Story

புஷ்பா: விமர்சனம்

Next Story

பிரேசில் காட்டுத் தீ:1.7 கோடி உயிரினங்கள் பலி