சலேக்கு கொலை அச்சுறுத்தல்!

நஜீப் 

நன்றி: 08.03.2026 ஞாயிறு தினக்குரல்  

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டு தொன்நூறு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் துவான் சுரேஸ் சலே மீது தற்போது கொலை அச்சறுத்தல் இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது.

அவர் சிறையில் நஞ்சூட்டப்பட்டு கொலை செய்யப்பட இடமிருக்கின்றது என்று அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர் என்று தெரிகின்றது. இது பற்றி சுகாதார அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான நளிந்தவிடம் கேள்வி எழுப்பப் பட்டிருக்கின்றது.

அப்போது தற்போதுதான் இது எனக்குத் தெரிய வருகின்றது. அவர் அரச பாதுகாப்பில் இருக்கின்றார். நாம் அவரைப் பாதுகாக்க வேண்டும். ஈஸ்டர் படுகொலையுடன் தொடர்புடைய சாட்சிகள் பலர் ஏற்கெனவே கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த முயற்சியும் சாட்சியை அழிக்கின்ற ஒரு ஏற்பாடாகத்தான் இருக்க வேண்டும். கைதாகி இருப்பவரை கொல்ல வேண்டிய தேவை யாருக்கு இருக்கும் என்று மக்கள் தேடிப்பார்க்க வேண்டும்.

Previous Story

குரல்தரும் குறுஞ் செய்திகள்

Next Story

කාන්තා මළ සිරුරටත් අතවර කළ තිරිසනා කවුද?