இந்திய ஊடகங்களான NDTV, தெ ஹிந்து மற்றும் மேற்குலக ஊடகங்களான பிபிசி, ரொயிட்டர் உட்பட பல ஊடகங்கள் முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளன.
திடீரென அறிவிக்கப்பட்ட பொதுத் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பாரிய வெற்றியீட்டிடுள்ளதாக ரொயிட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
பொருளாதார ரீதியாக சீர்குலைந்த நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்கும், வறுமைக்கு எதிராக போராடுவதற்கான வல்லமை தேசிய மக்கள் சக்தி கிடைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாகாணத்தில் மக்களின் ஆதரவு தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்திருப்பதை விசேட அம்சமாக ரொயிட்டர் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை இலங்கையின் புதிய ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளதாக பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
விகிதசார தேர்தல்
நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தக்க வைத்திருக்கிறது. ஊழலுக்கு எதிராக செயற்படவும் மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றவும் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் விகிதசார தேர்தல் முறைமையின் கீழ் தனியொரு கட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருப்பதாக Fornt line எனும் இந்திய சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.