சர்வதேச சாரணிய மா நாட்டில் ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி பங்கேற்பு!

-யும்னா என் அம்ரா-

இன்றுடன் (26.02.2024) நிறைவடைகின்ற சர்வதேச சாரணிய (10) பத்தாவது மா நாட்டில் கண்டி-உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி குருளைச் சாரணியர்களும் பங்கு பற்றி இருந்தனர். இந்த குருளைச் சாரணியத்தை கல்லூரியில் உருவாக்குவதில் காரணகர்த்தாவாக இருந்தவர் சிபாயா ரசீட் ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை கோணேஸ்வரா மகா வித்தியாலய மைதானத்தில் 20 ம் திகதி முதல் 26ம் திகதி (இன்று) வரை இந்த சாரணியப் பெரு விழா நடைபெற்றது.


முதல் நாள் வைபவத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அங்கு சமூகம் அளித்திருந்தார்.


இந்த நிகழ்வில் 28 நாடுகளைச் சேர்ந்த சாரணியர்கள் பங்கு பற்றி இருந்தனர். மொத்தமாக 12000 ஆயிரம் வரையிலான பாடசாலை சாரணியர்கள் இந்த சர்வதேச விழாவில் கலந்து கொண்டிருந்தனர். இன்றுடன் (26.02.2024) வைபவம் வெற்றிகரமாக நிறைவடைகின்றது.


வைபவத்தில் கலந்து கொண்ட கண்டி-உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி குருளைச் சாரணியர்களையும் அவர்களை அழைத்துச் சென்ற பொறுப்பாசிரியர்களையும் இங்குள்ள படங்களில் அவதானிக்க முடியும்.

Nat'l scout jamboree to bring economic returns to Passi City

Previous Story

அனுராவை எதிர்க்க மெகா கூட்டணி அவசியம்!

Next Story

வருகின்றது பொதுத் தேர்தல்!