சர்வதேச அதிசயம் பாருங்கள்!

நஜீப்

நமது அரச தலைவர்கள் சில காலத்துக்கு முன்னர் நாட்டை ஆசியாவின் ஆச்சர்யமாக்கிக் காட்டுவதாக சொன்ன போது நாம் அதனை நம்பவில்லை. எங்கே ஐயா இவர்கள் ஆசியாவின் ஆச்சர்யமாக நாட்டை மாற்றப் போகின்றார்கள் என்று அன்றும் நமது ராஜாக்களை நையாண்டி பண்ணியது நமக்கு மறக்காமல் நினைவுக்கு வருகின்றது. அன்று நமக்குத்தான் கணக்குத் தப்பிவிட்டது.

பார்த்தீர்களா? ஆசியாவின் ஆச்சர்யம் என்ன எங்கள் தேசத்தை உலகத்தின் ஆச்சர்யமாகவே மாற்றி அவர்கள் சர்வதேசத்தையே இன்று நம்மைப் பார்க்க வைத்து விட்டார்கள். யாசகர்கள் நமக்குச் சோத்துக்குக் காசு அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். சீனாவின் முன் பள்ளி மாணவர்கள் நமது பட்டினி போக்க காசு சேர்த்து அனுப்பி வருகின்றார்கள்.

நமது நிதி அமைச்சர் உலகம் பூராவிலும் சாப்பிடுவதற்கு வழியில்லாமல் இருக்கின்றோம் ஐயா ஏதாவது சாப்பாட்டுக்கு மருந்து செலவுகளுக்காவது வழி பண்ணுறீங்களா என்று கை நீட்டித் திரிகின்றார். இவை எல்லாம் ஆச்சர்யங்கள் அல்லாமல் வேறு என்ன?

நன்றி: 01.05.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மைத்திரிபால தகவலுடன் முரண்படும் எம்.பிக்கள்

Next Story

நாளை கொழும்பு வரும் காவிகள் படை