சர்வதேசத்துக்கு பீடாதிபதி செய்தி!

-நஜீப்-

வடக்கில் யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரர்  வெளியட்ட சில கருத்துக்கள் தெற்கு நடுநிலை சிங்கள மக்கள் மத்தியிலும் தற்போது வைரலாகி பெரு வரவேற்பையும் பாராட்டயும் பெற்றிருக்கின்றது.

இராணும் இராணுவத்துடைய வேலையைச் செய்ய வேண்டும். அவர்கள் சாமிகள் வேலை செய்யக் கூடாது. இங்கு ஐந்து ஆறு பௌத்தர்கள்தான் வாழ்கின்றோம். எதற்காக தமிழர்களின் காணிகளைப் பிடித்து 25-30 விகாரைகளை இங்கு கட்ட வேண்டும் என தேரர் கேள்வி எழுப்பி வருகின்றார்.

வடக்கில் வாழும் ஒரு உண்மையான தேரர் சர்வதேச சமூகத்துக்குச் சொன்ன ஒரு தராமான செய்தி இது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் வடக்கில் காணி அபகரிப்புப் பற்றி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய போது பௌத்த தேரர்கள் காசு வழங்குவதால் அவர்களுக்கு அங்கு நாம் காணிகளை இனம் கண்டு கொடுக்கின்றோம் என்று  பகிரங்கமாக கூறினார்கள்.

நாட்டில் என்ன நடக்கின்றது என்பதற்கு இது நல்ல உதாரணம். இதனை ஜனாதிபதி ரணில் கண்டித்ததுடன் உடன் இது போன்ற நடவடிக்கைகள் நிறுத்த வேண்டும் என்றும் அங்கு கட்டளையிட்டார். எனவே இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் பாரிய சதிகள் இருப்பது அப்பட்டமாக உலகிற்கு இப்போது தெரிய வந்திருக்கின்றது.

நன்றி: 14.05.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இம்ரான் கைது "சட்டவிரோதம்" -  உச்ச நீதிமன்றம்

Next Story

துருக்கி தேர்தல்: அதிபர் எர்துவான் முன்னுள்ள சவால்கள்