சம்பிக்க அதிரடித் தகவல்!

-நஜீப்-

சில தினங்களுக்கு முன்னர் பாடலிய சம்பிக்க ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி சில தகவல்களை நாட்டுக்குச் சொல்லி இருந்தார். அவரது தகவல் படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கண்டி-ரஜவப்பனேராம பிரதம விகாரதிபதித் தேரரைச் சந்தித்த போது அரசுக்கும் சஹ்ரான் தரப்புக்கும் உறவுகள் இருந்ததும் அவர்களுக்கு அரசு கொடுப்பனவு வழங்கி அவர்களிடத்தில் தகவல்களையும் உதவிகளும் பெற்றுக் கொண்டோம் என்பதனை அந்த சந்திப்பில் உறுதி செய்திருந்தார்.

Zahran Hashim: radical Islamist linked to Lanka blasts

தற்போது ஜனாதிபதி ரணில் குற்றவாளிகளை பாதுகாக்கின்ற இடத்தில்தான் இருக்கின்றார். அவர் ஒருபோதும் சுயாதீன விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மாட்டார் என்று 43 வது படை அணியின் தலைவராக அரசியல் களத்தில் நிற்கும் பாடலிய சம்பிக்க ரணவக்க அந்த ஊடகச் சந்திப்பில் பகிரங்கப்படுத்தி இருந்தார். இந்த நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் செய்பாடுகள் இருந்தது.

Sri Lanka's former SIS chief reveals more information on Easter attacks - NewsWire

அதனை தமது அரசியல் தேவைகளுக்காக சிலர் பாவித்துக் கொண்டார்கள். சனல் 4 சிங்களவர்களுக்கு எதிரான சதி என்ற வாதத்தை தான் ஏற்றுக் கொள்ள போவதில்லை என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார்.

 நன்றி: 17.09.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இந்திய எல்லையில் அணு ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் 

Next Story

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையால் இந்தியா - கனடா உறவில் விரிசல்!