நஜீப்
நன்றி: 14.06.2026 ஞாயிறு தினக்குரல்
ஈஸ்டர் தாக்குதலை நடாத்தி விட்டு அதனை மாற்றான் பெயரில் வரவு வைக்க முனைவது எவ்வளவு பெரிய கொடூரம். இது தொடர்பான பல தகவல்கள் இப்போது சங்கிலித் தொடர்போல வெளியாகி வருகின்றன. அலுத்கம தாக்குதலுக்குப் பின் கொழும்பில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.
அதில் அலி சப்ரி, சலே, இஜாஸ் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் இருந்தனர். அப்போது சலே பேசும்போது குறுக்கிட்ட இஜாஸ் அரசுக்கும் இராணுவத்துக்கும் இதில் தொடர்பிருக்கின்றது. எம்மிடம் என்ன ஆலோசனை கேட்க இருக்கின்றது.

சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுங்கள் என துணிவுடன் அங்கு கேட்க கொதித்துப்போன சலே இஜாசை நீ ஒரு தீவிரவாதி என மோசமான வார்த்தைகளில் திட்டினார். அலி சப்ரியும் இஜாஸ் இருக்கை அருகில் போய் நீ வெளியே போ என்று அவரை மிரட்டினார்.
பின்பு இஜாசை உள்ளே தள்ளி கொடுமைப்படுத்தியதும் அவர் நிரபராதி என விடுதலையான கதைகளை நாடு அறியும்.




