சனத் நிசாந்தவின் சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் கார் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (05.02.2024) வெலிசறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போதே சாரதியான பிரபாத் எரங்கவை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

அவரை 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனத் நிசாந்தவின் சாரதிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு | Bail To The Driver Of Sanat Nisantha

அத்துடன் எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பயணித்த வாகனம், கொள்கலன் பாரவூர்தி ஒன்றுடன் மோதி அண்மையில் விபத்துக்குள்ளானது.

இதன்போது, காயமடைந்த முன்னாள் அமைச்சர் சனத் நிசாந்தவும், பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

3 நாளாகியும் அமெரிக்க பதிலடி கொடுக்காதது ஏன்? 

Next Story

கெஹெலிய வழக்கில் புதிய திருப்பம்!பிரதான சூத்திரதாரி பசில்!